Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : நாய்க்கு பயந்து 180 மீட்டர் தூரத்திற்கு ஓலா பைக் புக் செய்த பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Woman Books Ola Bike for 180 Meters | பொதுமக்கள் வேண்டிய நேரத்தில் விருப்பப்படும் இடங்களுக்கு செல்ல பயன்பாட்டில் உள்ளவை தான் ஓலா, ஊபர் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள். இவற்றை பயன்படுத்தி ஏராளமான மக்கள் பயணம் செய்யும் நிலையில், இளம் பெண் ஒருவர் நாய்களுக்கு பயந்து வெறும் 180 மீட்டருக்கு ஓலா புக் செய்துள்ளார்.

Viral Video : நாய்க்கு பயந்து 180 மீட்டர் தூரத்திற்கு ஓலா பைக் புக் செய்த பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 Jun 2025 18:43 PM

தற்போது பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய தனியார் வாகன சேவைகள் உள்ளன. முன்னதாக தங்களிடம் வாகனங்கள் இல்லை என்றால் பொதுமக்கள் பேருந்து அல்லது ஆட்டோ ஆகிய போக்குவரத்து சேவைகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது ஓலா, உபர் உள்ளிட்ட போக்குவரத்து அம்சங்கள் காரணமாக மிக எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்கின்றனர். குறிப்பாக பைக் டாக்ஸியை பொருத்தவரை குறிப்பிட்ட தூரத்தில் பயணம் செய்ய பொதுமக்கள் அதனை தேர்வு செய்கின்றனர். ஆனால், பெண் ஒருவர் மிகக் குறுகிய தூரத்திற்கு ஓலா பைக் புக் செய்துள்ளார். அவர் குறுகிய தூரத்திற்கு பைக் புக் செய்திருந்தது ஆச்சரியத்தை தந்ததை விட அவர் பைக் புக் செய்ததற்கான காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாய்க்கு பயந்து வெறும் 180 மீட்டருக்கு ஓலா புக் செய்த இளம் பெண்

நாய்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நிலையில், பலருக்கு நாய்கள் மீது அதீத அன்பும் ஆர்வமும் உள்ளது. ஆனால், அதே அளவுக்கு சிலருக்கு நாய்கள் மீது விருப்பம் இல்லாமல் இருக்கும். இதற்கு தனிப்பட்ட காரணங்கள், நாய்களுடம் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். இவ்வாறு நாய்கள் மீது நாட்டம் இல்லாத நபர்கள் அவற்றின் அருகில் செல்ல கூட ஆசைப்பட மாட்டார்கள். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் நாய்களுக்கு பயந்து வெறும் 180 மீட்டர் தூரத்திற்கு ஓலா பைக் புக் செய்து பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by ROHIT VLOGSTER (@rohitvlogster)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் சாலையின் ஓரம் நின்றுக்கொண்டு இருக்கிறார். அவரிடம் ஓலா பைக் ஓட்டுநர் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் அருகில் தான் என கூறுகிறார். உடனடியாக அந்த நபர் மேப்பை பார்க்கிறார். உடனடியாக அவர் இவ்வளவு பக்கம் தான் உள்ளது என கூற, நாய்களுக்கு பயந்து ஓலா புக் செய்ததாக அந்த பெண் கூறுகிறார். அதனை கேட்கும் அந்த நபர் சிரிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.