Viral Video : இது பாரிசா?.. ஷாக்கான இந்திய இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Tourist's Shocking Paris Experience | பாரிசுக்கு சுற்றுலா சென்ற இந்திய சுற்றுலா பயணி ஒருவர் தான் எதிர்ப்பார்த்ததற்கு நேர் மாறாக பாரிஸ் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
ஒவ்வொரு நாடும் தனக்கென தனி சிறப்பை கொண்டு இருக்கும். அந்த நாட்டில் இயற்கை வளம், கட்டமைப்பு ஆகியவற்றை தாண்டி அந்த நாட்டின் ஆட்சி நிர்வாகம் எப்படி உள்ளது, அங்குள்ள மக்கள் அந்த நாட்டை எப்படி பராமரிக்கிறார்கள், எப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்பவை ஒவ்வொரு நாடுகளுக்கும் மாறுபடும். அந்த வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகவும் சுத்தமாக இருக்கும் என்றும், அங்கு பொதுமக்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ அந்த கருத்துக்களை பொய்யாக்கும் விதமாக உள்ளது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இது பாரிசா? – குழம்பிய இந்திய இளைஞர்
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது பெரும்பாலான நபர்களின் கனவாகவும், ஆசையாகவும் இருக்கும். காரணம் இந்த நாடுகள் மிக அழகிய தோற்றம், சுகாதரம் நிறைந்தவையாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டே பலரும் சில உலக நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவர். ஆனால், இத்தைய எண்ணத்தோடு பாரிசுக்கு சென்ற நபருக்கு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அது குறித்து தான் அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : Zookeeper-ஐ தனது தாய் என நினைத்து கொஞ்சிய வரிக்குதிரை.. உணர்ச்சி பொங்கும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கி பாரிஸ் சாலையில் நடந்துச் செல்கிறார். அந்த வீடியோவில், பாரிஸ் 5 நிமிடங்களில் எனக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டது என்று அவர் பதிவிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அந்த நபர், இது தான் பாரிஸா?, பார்ப்பதற்கு மீன் சந்தை போல் உள்ளது என்று கூறுகிறார். பாரிஸை நான் என் மனதில் இப்படி கற்பனை செய்து பார்க்கவில்லை. அந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள அந்த நபர் பாரிஸின் எல்லா பகுதிகளும் ஒரே மாதிரி இல்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கத்தியைத் தீட்டிய நபர்…. பயந்து கூண்டுக்குள் ஒளிந்துகொண்ட நாய் – வைரலாகும் வீடியோ
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் பாரிஸ் மீதான தங்களது பிம்பம் உடைந்துவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர் எப்பது குறிப்பிடத்தக்கது.