இலவச வைஃபை என்ற பெயரில் திருட்டு – வைரலாகும் வீடியோ
Viral Video : பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபைகளை பயன்படுத்துபவர்களை குறிவைத்து ஹேக்கர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மக்களை எச்சரித்து வருகின்றனர். இது போன்ற சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

இலவச வைஃபைக்காக போனை பறிகொடுக்கும் நபர்
சமீப காலமாக நூதன முறையில் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியாகி வருகின்றன. சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் போல, ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையைத் தூண்ட வேண்டும் என்பதற்கு இங்கு ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இலவச வைஃபை (WiFi) என்ற பெயரில் என்ற விளம்பரத்தை பார்த்து ஒருவர் தனது மொபைலில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யப்போகிறார். ஆனால் அதன் பிறகு நடந்தது பலரையும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியடையவும் செய்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இலவச வைஃபை என்ற பெயரில் மோசடி
பொதுவாக, பெரு நகரங்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் இலவச வைஃபை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இதுபோன்ற இடங்களில் எச்சரிக்கையாக பயன்படுத்துவது நல்லது. இதுபோன்ற இடங்களை தான் ஹேக்கர்கள் குறி வைக்கிறார்கள். சைபர் குற்றவாளிகள் இலவச வைஃபை என்ற பெயரில் நம் விவரங்களை திருடி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியாகி வருகின்றன. இருப்பினும், சமீபத்தில், ஒரு வேடிக்கையான சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க : பாராகிளைடிங் செய்துக்கொண்டே DJ போட்ட இளம் பெண்.. வைரல் வீடியோ!
வைரலாகும் வீடியோ
வீடியோவின் தொடக்கத்தில் இலவச வைஃபை என்று பெயரில் பொது இடத்தில் கியூஆர் குறியீட்டுடன் குறிப்பிட்டுள்ளது. அந்த வழியாக சென்ற ஒருவர், அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய தனது மொபைல் போனை அருகில் கொண்டு செல்கிறார். அப்போது அங்கிருந்த ஒருவர் அந்த மொபைல் போனை திருடி செல்கிறார். இதனால் சில நிமிடங்கள் செய்வதறியாது திகைக்கும் நபர் பின்னர் தான் ஏமாற்றமடைவதை உணர்கிறார். இது ரீல்ஸ் வீடியோவாக்காக உருவாக்கப்பட்ட வீடியோ என்றாலும் அதில் இருக்கும் உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க : பேட்மேன் வாகனத்தில் ஊர்வலம் வந்த மாப்பிள்ளை.. வாய் பிளந்த உறவினர்கள்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு வழிகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், ‘இலவச வைஃபை என்ற பெயரில் திருட்டுக்கள் நடைபெறுகின்றன. எனவே இது ஒரு நல்ல விழிப்புணர்வு வீடியோ என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு நபர், ‘உங்களுக்கு எப்படி இதுபோன்ற யோசனைகள் வருகின்றன’ என்று பதிவிட்டுள்ளார்.
பொது இடங்களில் இதுபோன்ற இலவச வைஃபைகளை பயன்படுத்த வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். காரணம், இது போன்ற இடங்களை ஹேக்கர்கள் குறிவைத்து பொதுமக்களின் மொபைல் போன் விவரங்களை திருடுகின்றனர். இதனால் சில விநாடிகளில் வங்கியில் உள்ள பணம் காணாமல் போகும் அபாயம் இருக்கிறது.