Viral Video : இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? இணையத்தில் கவனம் பெரும் ஸ்விக்கி வீடியோ!
Swiggy Employees Safeguard Gold Delivery : ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் தங்கம் ஆர்டர் செய்து, காவலர் பாதுகாப்புடன் டெலிவரி செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஸ்விக்கியின் புதிய டோர்ஸ்டெப் கோல்ட் டெலிவரி சேவையை காட்டுகிறது. இந்த உயர் பாதுகாப்பு நடவடிக்கை நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அதை வசதியாகவும், மற்றவர்கள் அதை ஆடம்பரமாகவும் கருதுகின்றனர்.

வளர்ந்து வரும் காலகட்டத்தில் (Growing period) இணையதளங்களைத் தொடர்ந்து, பல்வேறு விஷயங்கள் மிகவும் எளிமையாகி வருகிறது. மனிதர்கள் வீட்டை விட்டு வெளியிலே செல்லவேண்டாம். ஆன்லைனில் ஆர்டர் (Order online) செய்தால் வீட்டிற்கே அனைத்தும் டெலிவிரியாகிவிடும். இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் இந்த டெலிவரி சேவைகள் (Delivery services) இருந்து வருகிறது. கிராமங்களிலும் இது போன்ற டெலிவரி சேவைகளும் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில் ஸ்விகி, ஜொமேட்டோ (Swiggy, Zomato) என பல்வேறு சேவை தளங்கள் இருந்து வருகிறது. இந்த சேவைகளின் மூலமாக உணவுகளைத் தொடர்ந்து, பல்வேறு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே டெலிவிரியாகிவிடும். அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நபர் ஒருவர் ஸ்விக்கி இன்ஸ்டமார்ட் என்ற சேவைத்தளத்தில் அட்சயதிருதியை முன்னிட்டு தங்கம் ஆர்டர் செய்திருப்பார் போல, அந்த தங்கத்தைப் பாதுகாப்பாகக் காவலர் ஒருவருடன் டெலிவரி செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்விக்கி ஊழியர் ஒருவருடன் லாக்கர் இருக்கும் பெட்டியுடன் காவலர் ஒருவர் அவரின் பின்னல் அமர்ந்திருக்கிறார். அந்த லாக்கரில் தங்கத்தை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.
இந்த உயர் பாதுகாப்புக்கு மத்தியில் டோர்ஸ்டெப் கோல்ட் டெலிவரி என்ற புதிய டெலிவரி சேவையை ஸ்விக்கி தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. காவலர் மினி லாக்கரைப் பிடித்திருப்பதுபோலவும், ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் தனது பைக்கை ஓட்டிச்செல்லும் வீடியோ சொல்லியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ :
View this post on Instagram
இந்த வீடியோவில், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் பைக்கின் முன்பக்கத்தில் அமர்ந்து பிராண்டட் டி-சர்ட்டை அணிந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அவரின் பின்னால் ஒரு காவலர் இருப்பதுபோல தெரிகிறது, அவர் ஒரு மினி லாக்கரைப் பிடித்திருந்தார். அந்த லாக்கரில் ஒரு இன்ஸ்டாமார்ட் ஸ்டிக்கர் உள்ளது. இந்நிலையில் ஸ்விக்கி புதியதாக லாக்கர் உதவியுடன் பலத்த பாதுகாப்புடனும் தங்கத்தை டெலிவரி செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோவானது இணையத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இணையத்தில் வைரலாக இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்து :
இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் “வர வர மக்களுக்குச் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட்டது, தங்கத்தைக் கூடவா ஆர்டர் செய்வார்கள், கடவுளே என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் ஒருவர் “வரும் காலத்தில் மக்கள் வீட்டைவிட்டே வெளியே வரமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த சேவையும் நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.