Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : வீட்டின் கிச்சனில் பதுங்கி இருந்த சிங்கம்.. அதிர்ச்சியில் வீட்டின் உரிமையாளர்.. வைரலாகும் வீடியோ!

lion Enters The Kitchen : குஜராத் மாநிலம் காந்திநகரில், ஒரு வீட்டின் சமையலறையில் சிங்கம் புகுந்த வீடியோ வைரலாகி வருகிறது. 2025 ஏப்ரல் 2ம் தேதி இரவு 12 மணிக்கு வீட்டின் மேற்கூரை வழியாக நுழைந்த சிங்கம், சுமார் இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்துள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் பயந்து வெளியேற, பின்னர் சிங்கம் தானாகவே வெளியேறியுள்ளது

Viral Video : வீட்டின் கிச்சனில் பதுங்கி இருந்த சிங்கம்.. அதிர்ச்சியில் வீட்டின் உரிமையாளர்.. வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Barath Murugan
Barath Murugan | Published: 04 Apr 2025 17:13 PM IST

காட்டிற்கு ராஜா என்றால் நமது நினைவிற்கு வருவது சிங்கம்தான் (Lion). அப்படிப்பட்ட சிங்கம் ஒன்று குஜராத்தில் (Gujarat) ஒரு வீட்டின் கிச்சனில் (kitchen)  பதுங்கியிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம், காந்திநகர் (Gandhinagar) என்ற பகுதியில் கடந்த 2025, ஏப்ரல் 2ம் தேதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த சிங்கமானது கிச்சனில் மேல் பகுதியில் ஏறி அமர்ந்திருப்பது இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அந்த சிங்கம் பதுங்கி இருந்த நிலையில், சில நபர்கள் டார்ச் லைட்டை பயன்படுத்திப் பார்க்கின்றனர். அந்த சிங்கமானது இரவு சுமார் 12 மணியளவில் வீட்டின் மேற்கூரை வழியாக சமயலறைக்குள் நுழைந்துள்ளது. அந்த சிங்கமானது சாப்பிடுவதற்கு எதாவது இருக்கிறதா என்று பார்க்க கிச்சனில் நுழைந்ததா எனப் பலரும் வீடியோவின் கீழ் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

சிங்கம் உள்ளிருப்பதை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள், முதலில் பயந்து வெளியே செல்கின்றனர். பின் அவர்களின் 2 மணிநேர முயற்சிக்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து சிங்கமானது வெளியேறியிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :

இந்த வீடியோவில், வீட்டில் உள்ள சமையலறையில், பெரிய சிங்கம் ஒன்று புகுந்துள்ளது. அந்த சிங்கமானது கிச்சனில்  மேலே ஏறி அமர்ந்து இருக்கிறது. அந்த சிங்கமானது பயந்து மேலே அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. அந்த சிங்கத்தை அங்கிருந்து மனிதர்கள் சில டார்ச் லைட் அடித்து அது எங்கே அமர்ந்திருக்கிறது என்று பார்ப்பது வீடியோவில் தெரிகிறது.

மேலும் அந்த சிங்கம் மேலே அமர்ந்து பயமே இல்லாமல் ஜாலியாக அமர்ந்திருக்கிறது. இது போலச் சிங்கமானது நமது வீட்டிற்குள் புகுந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலே பீதியைக் கிளப்புகிறது. இந்த வீடியோவானது கடந்த 2025, ஏப்ரல் 02ம் தேதியில் எக்ஸ் பக்கத்தில் பயனர்  ஒருவர் வெளியிட்டுள்ளார்.  இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த சிங்கம், சுமார் 2 மணிநேரத்திற்குப் பின், வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதில் சில கருத்துக்களை மட்டும் பார்க்கலாம். முதல் பயனர் ஒருவர் சிங்கம் எப்படி வீட்டிற்குள் நுழைந்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் அந்த சிங்கத்திற்குப் பசியெடுத்திருக்கும், அதன் காரணமாகதான் வீட்டின் கிச்சனில் நுழைந்திருக்கும். அதற்குக் கொஞ்சம் சாப்பாடு போடுங்கள் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.