என்னை ஏன் திருமணம் செய்தாய்? அமெரிக்க பெண்ணுக்கு பதிலளித்த இந்தியர்
Viral Video: காதலுக்கு மொழி, இனம், மதம் ஆகியவற்றை பார்க்காது என மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க பெண், தனது இந்திய கணவருடனான வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க பெண்ணை மணக்கும் இந்தியர்
ஒரு அமெரிக்க (America) பெண், அவரது இந்திய கணவரும் பேசும் வீடியோ இன்ஸ்டாகிராமில் (Instagram) வைரலாகி, லைக்ஸ்களை குவித்து வருகிறது. காரணம் அந்த இந்திய இளைஞர் அளித்த பதில் பலரின் இதயங்களைத் தொட்டது. காதல் இனம், மொழி, மதம் என எதையும் பார்க்காது என்பதை அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். இதனையடுத்து அவர்களுக்கு இந்தியர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகம் சுருங்கிவிட்டது. இதனால் ஒருமித்த கருத்துடைய அனைவரும் நட்பு வட்டத்தில் இணையும் அளவுக்கு சமூக வலைதளங்கள் வளர்ச்சி அடைந்திருக்கிறது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், மதம் இனம், மொழி கடந்த ஒரு ஜோடி தங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு அமெரிக்கப் பெண்ணும் அவரது இந்தியக் கணவரும் பேசும் இதயத்தைத் தொடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அமெரிக்க பெண் ஒருவர் தன் இந்திய கணவரிடம் ஏன் தன்னை மணந்தாய்? என்று கேட்கிறார். இதற்கு அந்த ஆண் அளித்த பதில் இணைய மக்களின் இதயங்களை வென்றுள்ளது. இந்த வீடியோவை அனிகேத் மற்றும் கேண்டஸ் என்ற தம்பதியினர் தங்களது thekarnes என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். வீடியோவில், கேண்டஸ் தனது இந்தியக் கணவர் அனிகேத்திடம், ‘நீ ஏன் என்னை மணந்தாய்?’ என்று கேட்கிறார். இதற்கு, அனிகேத் மிகவும் அழகான பதிலைக் கொடுத்துள்ளார். வீடியோவைப் பார்த்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர்.
இதையும் படிக்க : எனக்கு ஏன் சீட் கொடுக்கல? சட்டென பெண்ணை அறைந்த நபர்.. ஏர்போர்டில் களேபரம்!
முதல் சந்திப்பிலேயே தோன்றிய காதல்
முதல் சந்திப்பிலேயே கேண்டஸின் நட்புத் தன்மையால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாக அனிகேத் தெரிவித்தார். வேறொரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், கேண்டஸ் உடன் பழகும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்ததாக அவர் அதில் தெரிவிக்கிறார். மேலும், கேண்டேஸ் ஒரு ஆசிரியர் என்பதும் தன்னை மிகவும் ஈர்த்ததாக அந்த நபர் கூறினார்.
வைரலாகும் வீடியோ
அவர் மேலும் பேசியதாவது, “உங்களுடன் செலவிடும் ஒவ்வொரு நேரமும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று நான் நினைத்தேன். அதே நேரத்தில், கேண்டேஸின் பெற்றோரைச் சந்தித்து அவர்களின் அன்பான மற்றும் நட்பான தன்மையைக் கண்ட பிறகு, கேண்டேஸை திருமணம் செய்து கொள்ளும் முடிவு இன்னும் உறுதியானது என்றார்.
இதையும் படிக்க : இந்தியாவை விட்டு செல்ல மனமில்லாமல் அழுத வெளிநாட்டு பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
அனிகேத்தின் பதிலைக் கேட்டு, கேண்டேஸ் சிரித்துக்கொண்டே, இது மிகவும் நல்ல பதில் என்று நகைச்சுவையாகக் கூறினார். மேலும் என் தந்தையின் காரணமாகவே நீங்கள் என்னை மணந்தீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வீடியோவில் நெட்டிசன்கள் தங்கள் அன்பைப் பொழிகிறார்கள். ஒரு பயனர், காதல் மனம் சார்ந்த விஷயம் என நிரூபித்திருக்கிரீர்கள் என கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “என் இந்திய சகோதரரே, நீங்கள் லாட்டரியை வென்றிருக்கிறீர்கள்” என்று கூறினார்.
இந்த ஜோடி இதற்கு முன்பும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன் கேண்டேஸ் அனிகேத்தின் தாய்மொழியான மராத்தியைக் கற்றுக்கொண்டு அவரை ஆச்சரியப்படுத்தினார், அதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.