Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Resignation: இதுபோல் தான் நானும்! கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா லெட்டர்.. வைரலாக்கும் நெட்டிசன்கள்..!

Toilet Paper Resignation: சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் லிங்க்டினில் பகிர்ந்த வைரலான பதிவு, ஒரு ஊழியர் தனது ராஜினாமா கடிதத்தை கழிப்பறை காகிதத்தில் எழுதியதாகக் கூறுகிறது. அந்த ஊழியர், நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டு, தேவை இல்லாமல் தூக்கி எறியப்பட்டதாக உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம், கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.

Viral Resignation: இதுபோல் தான் நானும்! கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா லெட்டர்.. வைரலாக்கும் நெட்டிசன்கள்..!
வைரலான ராஜினாமா பதிவு
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Apr 2025 21:00 PM IST

ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து வேலை மாற வேண்டியிருக்கும்போது, முதலில் அவர் செய்ய வேண்டிய விஷயம் வேலையை ராஜினாமா (Resignation letter) செய்வதுதான். பல நேரங்களில் ராஜினாமா செய்ய முடியாமலும், புதிய நிறுவனத்தில் இணைய முடியாமல் பலரும் தவித்த காட்சிகளை கேள்வி பட்டிருப்போம், பார்த்திருப்போம். அதேபோல், ஊழியர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை லெட்டராகவோ அல்லது மின்னஞ்சல் (Mail) மூலமாகவோ அனுப்புவார்கள். ஆனால், ஒரு ஊழியர் தனது ராஜினாமாவை கழிப்பறை காகிதத்தில் எழுதி கொடுத்தத்தை கேள்வி பட்டீர்களா..? அப்படி ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த கடிதத்தின் புகைப்படத்தை மக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

என்ன நடந்தது..?

சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரான ஏஞ்சலா யோஹ் என்பவர் யாரோ ஒருவர் எழுதிய ஒரு அனுபவத்தை சமூக ஊடக தளமான லிங்க்டினில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களில் ஒருவர் தனது கோபத்தையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இப்படியான ராஜினாமா கடிதத்தை தயார் செய்ததாகவும், ஆனால் அவரது இந்த பாணி தனித்துவமாகவும், ஆச்சர்யத்தையும் கொடுத்ததாகவும் கூறினார்.

மேலும், அந்த ஊழியர் தனது ராஜினாமாவில், “நான் கழிப்பறை காகிதம் போல் உணர்கிறேன். தேவைப்படும்போது என்னை பயன்படுத்திவிட்டு, தேவை இல்லாதபோது இந்த கழிப்பறை காகிதம் போல் எந்த யோசனையும் இல்லாமல் தூக்கி எரிந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த குறிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து, அந்த கடிதத்தில், “இந்த வார்த்தைகள் என் இதயத்தில் இருந்து வந்தன. இது வெறும் ராஜினாமா அல்ல, எங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தின் ஒரு கண்ணாடி.” என்றார்.

இந்த ராஜினாமா குறித்து ஏஞ்சலா கூறுகையில், “எங்கள் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது, ​​அவர்கள் வெறுப்புடன் அல்ல, நன்றியுடன் செல்லும் வகையில் அவர்களை மதிக்க வேண்டும்” என்றார்.

வைரலான பதிவு:

மேலும் அதில், “நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை காட்ட நான் இந்த காகிதத்தை தேர்ந்தெடுத்தேன்” என்று எழுதியிருந்தார். இருப்பினும், இது உண்மையான ராஜினாமா கடிதமா..? அல்லது ப்ராங்க் செய்வதற்காக எழுதப்பட்டதா என்பது தெளிவுபடுத்தவில்லை.

இந்த ராஜினாமாவைக் கண்டு, மக்கள் கோபமடைந்து இன்றைய கார்ப்பரேட் உலகத்தை விமர்சிக்கத் தொடங்கினர். இதுகுறித்து ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய காலத்தில் அலுவலக சூழல் மிகவும் மோசமாக உள்ளது. எல்லோரும் வேலையை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். ஒவ்வொரு அலுவலகத்தில் உங்கள் ஊழியர்களிடம் நன்றாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.