Viral Video : குட்டியை ஈன்ற யானை.. உடனடியாக ஓடிவந்து அரணாக நின்ற யானை கூட்டம்!

Elephant Herd Viral Video | இணையத்தில் ஒவ்வொரு நாளும் யானைகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் யானை ஒன்று குட்டியை பிரசவிக்கும் நிலையில், அதனை பாதுகாக்க யானை கூட்டம் ஓடி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : குட்டியை ஈன்ற யானை.. உடனடியாக ஓடிவந்து அரணாக நின்ற யானை கூட்டம்!

வைரல் வீடியோ

Published: 

21 Aug 2025 23:56 PM

யானைகள் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பற்று மிகுந்த விலங்காக உள்ள நிலையில், அவற்றின் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில், யானை ஒன்று பிரசவிக்கும் நிலையில், யானை கூட்டம் ஓடிவந்து பாதுகாப்புக்கு நிற்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

குட்டியை ஈன்ற யானை – உடனடியாக ஓடிவந்து அரணாக நின்ற யானை கூட்டம்

யானைகள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான விலங்குகள் ஆகும். அவை ஒன்றின் மீது ஒன்று அதிக அன்பு கொண்டு இருக்கும். அவ்வாறு யானைகள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக்கொள்வது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், யானை ஒன்று குட்டியை பிரசவிக்கும் நிலையில், அதற்கு பாதுகாப்பாக மொத்த யானை கூட்டமே திரளும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையை போல மகிழ்ச்சியாக பந்து விளையாடிய யானை.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த விடியோவில் யானை ஒன்று குட்டியை பிரசவிக்கிறது. அதுவரை தனித்தனியாக மேய்துக்கொண்டு இருந்த யானை கூட்டம், அந்த யானை பிரசவித்ததை தெரிந்துக்கொண்டதும் உடனடியாக ஒன்று சேர்கிறது. அந்த யானை கூட்டம் ஒன்று சேர்வதை பார்க்கும்போது புதிதாக பிறந்த குட்டி யானைக்கு அவை அரணாக இருப்பதாகவும், யானை குட்டியின் வருகையால் அவை மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதை போலவும் தோன்றுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : தண்ணீர் குட்டையில் உல்லாசமாக நீராடிய புலி குட்டிகள்.. கண் இமைக்காமல் காவல் காத்த தாய் புலி!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வாழ்க்கையில் எவ்வாறு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை யானைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் கூறியுள்ளார். இத்தகைய உறவுகள் இருந்தால் எத்தகைய சவாலையும் சமாளிக்க முடியும் என்று மற்றொருவர் கூறியுள்ளார்.