Viral Video : பச்சை ரசாயனம் பூசப்பட்ட வெள்ளரிக்காய்.. இணையத்தில் வைரலாகு அதிர்ச்சி வீடியோ!

Vendor Dipping Cucumber In Green Colour Chemical | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், சாலையோர வியாபாரி ஒருவர் தோல் சீவப்பட்ட வெள்ளரிக்காயை பச்சை நிற ரசாயனத்தில் முக்கி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பச்சை ரசாயனம் பூசப்பட்ட வெள்ளரிக்காய்.. இணையத்தில் வைரலாகு அதிர்ச்சி வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

09 May 2026 20:54 PM

 IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில சமூக பிரச்னைகள், குற்ற சம்பவங்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இருக்கும். அந்த வகையில், பீகாரில் சாயம் பூசப்பட்டு வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைராலகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பீகாரில் வெள்ளரிக்காய்க்கு சாயம் பூசப்பட்டதால் அதிர்ச்சி

நாளுக்கு நாள் உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது. உணவு பொருட்களில் ரசாயனம் கலப்பது, கண்களை கவரும் வகையில் வண்ணங்களை பூசுவது உள்ளிட்ட செயல்களை வியாபாரிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில், பீகாரில் சில வியாபாரிகள் வெள்ளரிக்காயில் பச்சை நிற சாயம் பூசுவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் இருக்கைகளின் கவர்களை கிழித்து எறிந்த இளைஞர்கள்.. இணையத்தில் கடும் கண்டனம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலை ஓரத்தில் பெண் ஒருவர் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அவர் தோல் சீவப்பட்ட வெள்ளரிக்காயை, பச்சை நிற ரசாயனத்தில் முக்கி எடுக்கிறார். அது உடனே பச்சை நிறமாக மாறுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் இருக்கைகளின் கவர்களை கிழித்து எறிந்த இளைஞர்கள்.. இணையத்தில் கடும் கண்டனம்!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், ரசாயனங்களை உட்கொள்ளும் பொதுமக்களின் நிலை என்னவாகும் என்று பலரும் ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி