Viral Video : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவன்.. கேக் வெட்டிய பெற்றோர்!

Parents celebrated Son Who Failed in 10th Exam | பொதுவாக பிள்ளைகள் ஏதேனும் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவர்கள் மீது கோபமடைந்து திட்டுவது, அடிப்பது உள்ளிட்ட சில செயல்களை செய்வர். ஆனால், கர்நாடகாவை சேர்ந்த பெற்றோர் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த தங்களது மகனுக்கு கேக் வெட்டியுள்ளனர்.

Viral Video : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவன்.. கேக் வெட்டிய பெற்றோர்!

வைரல் வீடியோ

Published: 

10 May 2025 17:14 PM

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் மாணவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. காரணம், 10 ஆம் வகுப்பு தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் என்ன படிப்பை தேர்வு செய்யலாம் என்பது உறுதியாகும். இதேபோல, மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் என்ன துறையை தேர்வு செய்து படித்தார்களோ அதே துறையில் தான் கல்லூரி பயில முடியும். கல்லூரி படிப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கு என்பதால் அதற்கு காரணமாக உள்ள இந்த பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இதற்காக பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்கின்றனர்.

தேர்வில் தோல்வியடைந்த மாணவன் – கேக் வெட்டிய பெற்றோர்

பள்ளிகளில் படிக்கும் தங்களது பிள்ளைகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என பெற்றோர்கள் நினைப்பர். ஒருவேளை, பிள்ளைகள் அதிக மதிப்பெண்களை பெறவில்லை என்றால், அவர்கள் கோபம் அடைந்து பிள்ளைகளை திட்டுவது கூட உண்டு. ஆனால் கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு அவரது பெற்றோர் கேக் வெட்டியுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. அந்த மாணவனின் பெற்றோர் அவருக்கு கேக் வெட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ கவனம் பெற்று வருகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

கர்நாடகா மாநிலம் பகல்கோட் பகுதியை சேர்ந்த அந்த மாணவன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 625 மதிப்பெண்களுக்கு வெறும் 200 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தோல்வியடைந்துள்ளார். அதற்காக மாணவனின் பெற்றோர் அவரை திட்டமல், அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மாணவனின் முயற்சியை பாராட்டியும், அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காகவும் அவர்கள் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.