Viral Video : குழந்தைக்கு வாழ்நாள் அனுபவத்தை கொடுத்த பைலட் தந்தை.. நெகிழ்ச்சி வீடியோ!
Pilot Father Gave His Baby A Lifetime Memory | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பைலட் தந்தை ஒருவர் தனது கைக்குழந்தையை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த உலகத்தில் தாய், தந்தையின் அன்பை விடவும் எதுவும் பெரியதாக இருக்காது. தாய், தந்தைகள் தங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மகிழ்ச்சியையும் தங்களது பிள்ளைகள் பெற வேண்டும் என அவர்கள் நினைப்பர். இந்த நிலையில், விமான பைலட் ஒருவர் தனது மகனை பைலட் இருக்கையில் வைத்து அழகு பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனது கைக்குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்த பைலட் – நெகிழ்ச்சி வீடியோ
விமானத்தில் பயணியாற்றும் ஊழியர்களுக்கும், விமான பைலட்டுகளுக்கு அதே விமானத்தின் தங்களது குடும்பத்தினர் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியானதாகவும், பெருமைக்குரிய நிகழ்வாகவும் இருக்கும். இவ்வாறு ஏராளமான பைலட்டுகள் மற்றும் விமான பணிப்பெண்கள் தங்களது உறவுகள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பைலட் ஒருவர் தனது மகனை தனது இருக்கையில் வைத்து அழகு பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : இப்படி ஒரு ஆட்டோ ஓட்டுநரா.. இளம் பெண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram