Viral Video : ஜேசிபி மூலம் செய்யப்பட்ட பிரம்மாண்ட சமையல்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
Huge Meal Preparation with JCB | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் வியப்பூட்டும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஜேசிபி மூலம் பெரிய பாத்திரத்தில் உணவு சமைக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
ஜேசிபி வாகனம் வீடு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் முக்கிய கருவியாக உள்ளது. பள்ளம் தோண்டுவது, கடினமான பாறைகள், சுவர்களை இடிப்பது ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஜேசிபி வாகனம் மூலம் உணவு சமைக்கப்படுகிறது. பிரம்மாண்ட பாத்திரத்தில் உணவு சமைக்கப்படும் நிலையில், ஜேசிபி வாகனம் அதனை கலக்குகிறது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஜேசிபி மூலம் செய்யப்பட்ட பிரம்மாண்ச சமையல்
சமையல் என்பது உணவு தயாரிக்கும் ஒரு முறையாக மட்டுமன்றி, அது ஒரு கலையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பலரும் விதவிதமான சமையல் செய்து சாதனை படைப்பது, அதிக வகைகளை சமைத்து சாதனை படைப்பது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் ராட்ச பாத்திரத்தில் ஜேசிபி வாகனத்தின் மூலம் செய்யப்பட்ட சமையள் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : Porsche-ல் மின்னல் வேகத்தில் பறந்த தாய்.. ஆச்சரியத்தில் வாயடைத்து போன மகன்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு ராட்த பாத்திரம் முழுவதும் பருப்பு உணவு சமைக்கப்படுகிறது. அவ்வளவு பெரிய பாத்திரத்தில் சமைக்கும் அளவுக்கு கரண்டிகள் எதுவும் இல்லாத நிலையில், ஜேசிபி வாகனத்தை கொண்டு அந்த பருப்பு உணவு கிளறப்படுகிறது. பிறகு அந்த ராட்சத பாத்திரத்தில் இருக்கும் உணவு ஜேசிபி மூலம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் டிராக்டரில் ஊற்றப்படுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இவ்வளவு பெரிய பாத்திரத்தில் சமைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?, இந்த நிகழ்வு எங்கு நடைபெற்றது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியாமல் உள்ளது.
இதையும் படிங்க : திடீரென கீழே விழுந்த பாகன்… துடித்துப்போன யானை – வைரலாகும் வீடியோ
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.