Viral Video : கத்தி குத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Group of Young Men Save Woman From Stabbing | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கத்தி குத்துக்கு உள்ளாக இருந்த பெண்ணை சில இளைஞர்கள் காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : கத்தி குத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

08 May 2026 19:15 PM

 IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களாக தான் அவை பெரும்பாலும் இருக்கும். அந்த வகையில், பெங்களூரில் கத்தி குத்துக்கு உள்ளாக இருந்த பெண் ஒருவரை சில இளைஞர்கள் காப்பாற்றுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

கத்தி குத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய இளைஞர்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. சமீப காலமாக பொது இடங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், வாக்கம் போல பொதுவெளிகளில் நடைபெறும் தாக்குதல்களை கண்டும் காணாமல் இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது பெண் ஒருவரை இளைஞர்கள் காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : சுற்றுலா பயணியை கன்னத்தில் அறைந்த ஆமை.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சாலையில் நடந்துச் செல்லும் பெண் ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வரும் அவரது கணவர் கத்தியை வைத்து தாக்குகிறார். அதனை கண்ட இளைஞர்கள் சிலர், அந்த பெண்ணின் கணவரை தாக்கி பெண்ணை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : கொளுத்தும் வெயில்.. தெருநாய்களுக்கு கடையில் அடைக்கலம் கொடுத்த நபர்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி