AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ரிப்போர்ட் இதோ..

மழை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் சற்று கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 36.1, திருப்பத்தூரில் 35.1 மற்றும் பாளையங்கோட்டையில் 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 May 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், மே 9, 2026: தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், மே 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் கொட்டும் மழை:

மே 11ஆம் தேதி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காங்கிரஸூடன் அமர விருப்பமில்லை.. மக்களவையில் தனி இருக்கை கேட்ட கனிமொழி எம்பி!

மே 12 மற்றும் 13ஆம் தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கணிசமாக குறையும் வெப்பநிலை:

மழை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் சற்று கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 36.1, திருப்பத்தூரில் 35.1 மற்றும் பாளையங்கோட்டையில் 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 33 டிகிரி செல்சியசும், மீனம்பாக்கத்தில் 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்த வெப்பநிலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

அதேபோல், வரக்கூடிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us