Viral Video : மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Auto Driver Claiming That He Earns 75000 Rupees | சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் மாதம் ரூ.75,000 சம்பாதிப்பதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், மும்பையில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் நபர் ஒருவர் தான் மாதம் ரூ.75,000 சம்பாதிப்பதாக கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்
உலகில் மனிதர்கள் பல விதமான வேலைகளை செய்கின்றனர். பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் நிலையில், சிலர் சொந்தமாக தொழில் செய்கின்றனர். அந்த வகையில், ஏராளமானவர்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர். சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் இது சிறந்த வருமானத்தை தரும் தொழிலாக உள்ளதால் பலரும் இதனை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், ஆட்டோ டிரைவர் ஒருவர் ரூ.75,000 சம்பாதிப்பதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : உணவகத்தில் பிளேட்டுகளை நொறுக்கி நடனமாடிய ரோபோட்.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வெர்மா என்பவர் தான் ஆட்டோவில் பயணம் செய்வதை வீடியோ பதிவு செய்கிறார். அப்போது அவர் பயணம் செய்யும் ஆட்டோவை ஓட்டிச் செல்லும் நபர் தான் ஒரு நாளுக்கு செலவுகள் போக ரூ.2,500 சம்பாதிப்பதாக கூறுகிறார். அவர் கூறியபடி கணக்கு செய்து பார்த்தால் அவர் ஒரு மாதத்திற்கு மொத்தம் ரூ.75,000 சம்பாதிக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெர்மா, இந்தியாவில் ரூ.30,000 சம்பளம் வாங்குவது மரியாதையாக கருதப்படுகிறது. ஒரு ஆட்டோ ஓட்டுநர் ரூ.75,000 சம்பாதிக்கிறார், இது வெள்ளி இல்லையா என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : விமான பயணத்திற்கு முன்பு குழந்தையின் தந்தை வெளியிட்ட அறிவிப்பு.. வரவேற்பை பெற்ற வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.