மனது இளமையாகவே உள்ளது.. 83 வயதில் பஞ்சி ஜம்பிங் செய்த மூதாட்டி.. வைரல் வீடியோ!
83 Years Old Woman Bunjee Jumping | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், 83 வயது மூதாட்டி ஒருவர் பஞ்சி ஜம்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
உலக அளவில் பஞ்சி ஜம்பிங், பாரா கிளைடிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுக்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இவை மிகவும் சாகசம் நிறைந்த விளையாட்டுளாக உள்ள நிலையில், வாக்கையில் ஒருமுறையாவது அவற்றை செய்துவிட வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில் 83 வயது மூதாட்டி ஒருவர் பஞ்சி ஜம்பிங் (Bunjee Jumping) செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
83 வயதில் பஞ்சி ஜம்பிங் செய்த மூதாட்டி
பஞ்சி ஜம்பிங், பாரா கிளைடிங் உள்ளிட்டவை மக்கள் அதிகம் விரும்ப கூடிய சாகச விளையாட்டுகளாக உள்ள நிலையில், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் அவற்றை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு முதியவர்கள், நடக்க முடியாதவர்கள், கண் தெரியாதவர்கள் என பலரும் இத்தகைய சாகசங்களில் ஈடுபடுவது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், 83 வயது மூதாட்டில் பஞ்சி ஜம்பிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சாலையோரத்தில் விழுந்த குட்டி யானை.. பதறிப்போன தாய் யானை.. அடுத்து நடந்தது என்ன?
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் இந்தியாவின் மிக உயரமான பஞ்சி ஜம்பிங் பகுதியான ரிஷிகேஷ், சிவகிரியில் இருந்து குதிக்கிறார். அத்தனை அடி உயரத்தில் இருந்து குதிக்கிறோம் என்ற அச்சம் இல்லாமல் அந்த மூதாட்டி மிகவும் சாதாரனமாக குதிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சோயா பீன்ஸ் உருளை இடிந்து விழுந்து விபத்து.. நொடி பொழுதில் உயிர் தப்பிய ஊழியர்கள்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், உடலுக்கு தான் வயது ஆகிவிட்டது ஆனால் மூதாட்டியின் மனது இன்னும் இளமையாகவே உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மூதாட்டியின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.