Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : வீடியோ கால் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இளைஞர்.. குவியும் பாராட்டு!

Young Man Helped Woman to Deliver Baby in Railway Station | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல ஆச்சர்யமூட்டும் வீடியோக்கள் வெளியாகி நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : வீடியோ கால் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இளைஞர்.. குவியும் பாராட்டு!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Oct 2025 20:34 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இல்லை என்றால் உலகத்தை சுற்றி நடைபெறும் பல சுவாரஸ்யமான சம்பங்கள் உலகிற்கு தெரிய வராமலே இருந்துவிடும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகின் எந்த மூலையில் ஆச்சர்யமூட்டும் சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்துல் மிக வேகமாக வைரலாகி விடுகிறது. அந்த வகையில் வீடியோ காலில் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரைப்படி இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு ரயில் நிலையத்தில் வைத்து பிரசவம் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இளைஞர்

மும்பையின் ராம் மந்திர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவருக்கு நள்ளிரவு 1 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் குழந்தை பாதி வெளியே வந்த நிலையில், மிகவும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அழைத்தும் யாரும் அங்கு வரவில்லை. ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியுள்ளது. நிலமை தீவிரமடையவே பெண் மருத்துவர் வீடியோ காலில் கூறியபடி இளைஞர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மீட்பு பணிக்கு வராமல் தாமதமாக்கிய அதிகாரிகள்.. 80 கிலோ எடை கொண்ட முதலையை தோலில் சுமந்த நபர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Manjeet Dhillon (@manjeet9862_)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்ணை சூழ்ந்து அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு அருகில் ஒரு இளைஞர் நின்றுக்கொண்டு இருக்கிறார். அவர் தான் மருத்துவர்களின் அறிவுரைப்படி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். ரயில்வே துறை அதிகாரிகள், அந்த பெண்ணின் குடும்பத்தினர் என அனைவரும் அந்த இளைஞருக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். பின்னர் அந்த பெண் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்படுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பெண் பயணியின் மொபைல் போனை பிடுங்கிய ரயில்வே போலீஸ்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த இளைஞரின் தன்னலமற்ற செயலை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.