Vivo T4R : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது விவோ டி4ஆர்.. விலை எவ்வளவு?

Vivo T4R Smartphone Launched in India | விவோ நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vivo T4R : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது விவோ டி4ஆர்.. விலை எவ்வளவு?

விவோ டி4ஆர்

Published: 

31 Jul 2025 23:13 PM

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக உள்ளது தான் விவோ (Vivo). இவ்வாறு அதிக அளவிலான மக்கள் விவோ ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. விவோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக iQOO Z10R ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனை (Vivo T4R Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன விவோ டி4ஆர்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ டி4, விவோ டி4எக்ஸ், விவோ டி4லைட் உள்ளிட்ட டி சீரீஸ் பட்டியலில் இணைந்துள்ளது. இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் iQOO Z10R ஸ்மார்ட்போனின் அம்சங்களை ஒத்ததாக உள்ளது. டிஸ்பிளே, பிராசசர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிரியானதாக உள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் Quad – Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் 7400 5ஜி பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.20,000-க்குள் கிடைக்கும் மிக விரைவான ஸ்மார்ட்போன் இது என விவோ கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்கத்தில் 50 மேகாபிக்சல் சோனி IMX882 சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன் பக்கத்தில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Samsung Galaxy F36 5G : பட்ஜெட் விலையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஃப்36  5ஜி.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் ரூ.17,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் ரூ.19,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி4ஆர் ஸ்மார்ட்போன் ரூ.21,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.