New Aadhaar App: மத்திய அரசு பலே திட்டம்! அறிமுகமான புதிய ஆதார் ஆப்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன?

UIDAI New Aadhaar App: UIDAI-யின் mAadhaar ஆப் தற்போது வரை பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், இது விவரங்களைப் பார்ப்பது, e-Aadhaar பதிவு செய்வது என மட்டுமே இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ஆப்பில், பயனர்கள் இப்போது தங்கள் ஆதார் தகவல்களைப் பாதுகாப்பாக சேமித்து QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

New Aadhaar App: மத்திய அரசு பலே திட்டம்! அறிமுகமான புதிய ஆதார் ஆப்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன?

ஆதார் ஆப்

Published: 

10 Nov 2025 19:14 PM

 IST

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிகவும் அவசியமானது. குழந்தைகள் பள்ளி சேர்ப்பது முதல் கல்லூரி, வங்கிக்கணக்கு திறப்பு, டிக்கெட் முன்பதிவு செய்தல் உள்ளிட்ட பலவற்றிற்கும் ஆதார் அட்டை (Aadhaar Card) மிக முக்கியமானது. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. எனவே, ஆதார அட்டை தொடர்பான அனைத்து வேலைகளும் UIDAI வலைத்தளத்திற்கு செய்து அப்டேட் செய்ய வேண்டியதாகியுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்கள் ஆதார் அட்டையை மேலும் டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பானதாக மாற்ற ஒரு புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம், உங்கள் செல்போனில் பாதுகாப்பாக இருப்பதால், இனி நீங்கள் ஒரு உங்கள் ஆதார் அட்டையை உங்களுடன் நாள்தோறும் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

UIDAI தானே இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது. இந்த ஆப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம், அனைவரும் தங்கள் ஆதார் அட்டையை தங்கள் செல்போனில் ஸ்மார்ட் முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்த ஆப்பை பயன்படுத்தி மக்கள் தங்கள் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் தங்கள் ஆதாரை எளிதாகவும் சரிபார்க்கலாம். UIDAI இன் பதிவின்படி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் இருவரும் இந்த செயலியை நிறுவலாம்.

ALSO READ: யுபிஐ-ல் வருகிறது ஏஐ.. இனி இந்த சிக்கல்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம்!

புதிய ஆதார் ஆப்பின் சிறப்பம்சங்கள்:

  • நீங்கள் இந்த மின்-ஆதார் செல்போன் ஆப்பில் ஏற்றிகொள்வதன்மூலம், பர்ஸ்களிலும், கைகளில் வைத்துகொண்டு அலைய வேண்டியவில்லை.
  • ஆதார் விவரங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பினால், முகத்தை ஸ்கேன் செய்து காண்பிக்கலாம். இது ஒரு வகையில் ஓடிபி போன்று பாதுகாப்பானது.
  • பயன்பாட்டில் உள்நுழைவது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் செய்யப்படும். இதன் காரணமாக தரவு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.
  • இந்த ஆப் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் கிடைக்கிறது.
    இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் உங்கள் ஆதாரை நீங்கள் சரிபார்க்கலாம்.

புதிய செயலி பழைய mAadhaar செயலியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

UIDAI-யின் mAadhaar ஆப் தற்போது வரை பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், இது விவரங்களைப் பார்ப்பது, e-Aadhaar பதிவு செய்வது என மட்டுமே இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ஆப்பில், பயனர்கள் இப்போது தங்கள் ஆதார் தகவல்களைப் பாதுகாப்பாக சேமித்து QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் PDF-ஐ பதிவிறக்கம் செய்ய அல்லது PVC அட்டையை ஆர்டர் செய்ய விரும்பினால், இதற்கு mAadhaar-ஐப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், ஆதார் ஐடியை உருவாக்குதல் அல்லது ஆதார் அப்டேட் போன்ற வசதிகள் இன்னும் UIDAI போர்டல் அல்லது mAadhaar-இல் மட்டுமே கிடைக்கும்.

ALSO READ: கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய அட்டகாசமான அம்சங்கள்.. என்ன என்ன?

பயனர்கள் என்ன நன்மைகளைப் பெறுவார்கள்?

  • இந்த புதிய ஆப் மூலம் ஹோட்டல் செக்-இன், சிம் செயல்படுத்தல் அல்லது வங்கி போன்ற பணிகள் இப்போது சில நிமிடங்களில் முடிந்துவிடும்.
  • குடும்பத்தின் அனைத்து ஆதார் அட்டைகளையும் ஒரே செல்போன் பயன்பாட்டில் வைத்து கொள்ளலாம்.
  • QR அல்லது முக ஸ்கேன் மூலம் விவரங்களைப் பகிர்வது தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.