Snapchat : பயனர்கள் பல நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த அம்சத்தை அறிமுகம் செய்தது Snapchat.. என்ன தெரியுமா?

Snapchat's New Features | ஏராளமான மக்கள் ஸ்நாப்சாட் செயலியை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். உரையாடல் மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்கு இந்த செயலியை பலரும் அதிகம் பயன்படுத்தும் நிலையில், அதில் மேலும் சில சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Snapchat : பயனர்கள் பல நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த அம்சத்தை அறிமுகம் செய்தது Snapchat.. என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Sep 2025 13:36 PM

 IST

ஏராளமான மக்கள் பயன்படுத்தும் ஸ்நாப்சாட் (Snapchat) செயலியில் பயனர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மேலும் ஒரு புதிய அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சங்கள் மூலம் பயனர்கள் இனி சிக்கல்கள் இல்லாமல் அந்த செயலியை பயன்படுத்த முடியும் என ஸ்நாப்சாட் கருதுகிறது. இந்த நிலையில், ஸ்நாப்சாட் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த இரண்டு புதிய அம்சங்கள் என்ன என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோடிக்கணகான மக்கள் பயன்படுத்தும் ஸ்நாப்சாட் செயலி

வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியை போல பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு செயலி தான் ஸ்நாப்சாட். இந்த செயலியை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்கலாம். புகைப்படங்கல் மட்டுமன்றி, இந்த செயலியிலும் தனிநபர் மற்றும் குழு உரையாடல்களை மேற்கொள்ளலாம். இதில் பல சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், பலருக்கும் இது மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இந்த நிலையில், தான் பயனர்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : உலகின் முதல் AI அமைச்சர்.. ஊழலை ஒழிக்க அல்பேனியா அரசு அதிரடி நடவடிக்கை!

சாட்களை நிரந்தரமாக சேமித்து வைக்கலாம்

ஸ்நாப்சாட் செயலியின் சாட் அம்சத்தை பயன்படுத்தி உரையாடும்போது அந்த சாட்கள் மற்றும் புகைப்படங்கள் 24 மணி நேரங்களில் காணாமல் போய்விடும். இந்த சூழலில் சேட் அப்படியே இருக்க வேண்டும் அதில் இருக்கும் புகைப்படங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றால் அந்த ஒவ்வொரு குறுஞ்செய்தி மற்றும் புகைப்படங்களை கிளிக் செய்து தனியாக சேகரிக்க வேண்டும். இது சற்று கடினமானது என்பதால் பெரும்பாலான பயனர்கள் சாட்கள் தானாகவே சேவ் செய்யப்படும் அம்சத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். அந்த அம்சத்தை தான் ஸ்நாப்சாட் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர தனி நபர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் ஸ்ட்ரீக்ஸ்களை குழுக்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : இந்த 8 விஷயங்களை கவனிக்காம லேப்டாப் வாங்காதீங்க! விவரம் இதோ

சாட்களை நிரந்தரமாக சேமிப்பது எப்படி?

ஸ்நாப்சாட் அறிமுகம் செய்துள்ள Infinite Retention அம்சத்தை பயன்படுத்தி மிக சுலபமாக சாட்களை நிரந்தமாக சேமித்துக்கொள்ளலாம். இந்த அம்சத்தை ஒருவர் ஆன் செய்யும்போது அது குறித்து இருவருக்கும் செய்தி அனுப்பப்படும். இருவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த அம்சம் ஆன் செய்யப்பட்டு அனைத்து சாட்களும் சேகரிக்கப்படும். இந்த அம்சத்தை பயன்படுத்தி சாட்களை நிரந்தரமாக சேமித்து வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.