Emergency Call மூலம் ஒரு உயிரையே காப்பாற்றலாம்.. எப்படி தெரியுமா?

Importance of Emergency Call Feature | ஸ்மார்ட்போன்களில் எமர்ஜென்சி கால் என்ற அம்சம் உள்ளது. அதனை பெரும்பாலான நபர்கள் பயன்படுத்துவதே இல்லை. ஆனால், அந்த அம்சத்தை பயன்படுத்தி ஒருவரின் உயிரையே காப்பாற்றலாம். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Emergency Call மூலம் ஒரு உயிரையே காப்பாற்றலாம்.. எப்படி தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

19 Oct 2025 14:40 PM

 IST

தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஸ்மார்ட்போன் இல்லாமல் பலரால் இருக்கவே முடிவதில்லை. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காக பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய அம்சம் ஒன்றை பலரும் தெரிந்துக்கொள்ளாமலே உள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது உயிரையும், நமது குடும்ப உறுப்பினர்களின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும். அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எமர்ஜென்சி காலில் அம்சத்தில் இருக்கும் முக்கிய அம்சம்

ஸ்மார்ட்போன்களில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் தங்களது ஸ்மார்ட்போன்களை லாக் செய்து வைத்திருப்பர். இந்த நிலையில், அந்த நபர் ஏதேனும் விபத்தில் சிக்கி சுய நினைவு இல்லாமல் இருந்தால் அவரது குடும்பத்தை தொடர்ப்புக்கொள்ள முடியாமல் போய்விடும். இந்த நிலையில், எமர்ஜென்சி காலில் (Emergency Call) முக்கியமானவர்களின் நம்பரை பதிவு செய்து வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : BSNL : தீபாவளிக்கு இரண்டு அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்.. என்ன என்ன தெரியுமா?

எமர்ஜென்சி காலின் சிறப்பு அம்சங்கள்

  • ஒரு விபத்தில் சிக்கி பேச முடியாமல் இருக்கும் சூழலில் ஸ்மார்ட்போனில் இருக்கும் எமர்ஜென்சி கால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டு இருந்தாலும், எமர்ஜென்சி காலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நபரை சுலபமாக தொடர்ப்புக்கொள்ள முடியும்.
  • எமர்ஜென்சி கால் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • விபத்து தவிர எதிர்பாராத உடல்நல சிக்கல்களின் போதும் இந்த எமர்ஜென்சி கால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க : ஒன்பிளஸ் தீபாவளி சேல்.. ஸ்மார்ட்போன்கள் முதல் பட்ஸ் வரை.. அசத்தல் தள்ளுபடி!

மருத்துவ தகவலையும் இணைக்கலாம்

எமர்ஜென்சி காலில் மொபைல் எண்கள் மட்டுமன்றி, மருத்துவ தகவல்களையும் (Medical Details) இணைத்து வைக்கலாம். இவ்வாறு மருத்துவ தகவல்களை இணைப்பதன் மூலம், முதலுதவி சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு சுலபமாக இருக்கும். உதாரணமாக நமக்கு என்ன உடல்நல சிக்கல் உள்ளது என்பதை அதில் பதிவு செய்து வைக்கும் பட்சத்தில் அதன் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர். இது ஒருவரின் உயிரை காப்பாற்ற முக்கிய பங்கு வகிக்கும்.