சிம் கார்டில் நெட்வொர்க் வரவில்லையா? இது தான் பிரச்னை – எப்படி சரி செய்வது?

Fix SIM Signal Issues: ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிவிட்டது. இந்த நிலையில் மக்கள் ஸ்மார்ட்போன்களில் அதிகம் நெட்வொர்க் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். இந்த நிலையில் இதற்கான காரணம் என்ன ? உண்மையில் இதனை எப்படி சரி செய்வது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சிம் கார்டில் நெட்வொர்க் வரவில்லையா? இது தான் பிரச்னை - எப்படி சரி செய்வது?

மாதிரி புகைப்படம்

Published: 

10 Sep 2025 19:10 PM

 IST

ஸ்மார்ட்போன்கள்  (Smartphone) நம் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. இந்த நிலையில் திடீரென உங்கள் ஸ்மார்ட் போனில் No Service அல்லது சிக்னல் பார் இல்லாமல் போனால் உங்களால் யாருக்கும் போன் செய்ய முடியாது. மெசேஜ் அனுப்பவோ அல்லது டேட்டா பயன்படுத்தவோ முடியாது. நம் அன்றாட செயல்பாடுகள் ஸ்மார்ட்போனை நம்பி இருப்பதால், சிக்னல் இல்லாமல் போனால் நம் வாழ்க்கையை ஸ்தம்பிப்பது போலாகிவிடும். இது ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் – ஐடியா, பிஎஸ்என்எல் என அனைத்து நெட்வொர்க் பயனர்களிடமும் பொதுவாக ஏற்படும் பிரச்னை. பல நேரங்களில் இதனை எளிய வழிகலில் சரி செய்ய முடியும். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நெட்வொர்க் வராமல் போகும் காரணங்கள்

இதற்கு பலவீனமான நெட்வொர்க் கவரேஜ் காரணமாக இருக்கலாம். அடுக்குமாடி, தரைதளம் போன்ற பல இடங்களில் சிக்னல் குறைவாக இருக்கலாம். சிம் கார்டு சரியாக பொருத்தப்படாதத இதற்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக சிம் கார்டை முறையாக பொருத்தப்படவில்லை என்றால் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்படலாம். பழைய சாஃப்ட்வேர் கூட நெட்வொர்க பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம்.  இதனால் உங்கள் மொபைலின் சாஃப்ட்வேரை அடிக்கடி அப்டே் செய்வது அவசியம். நெட்வொர்க் மோட் தவறாக இருந்தால் கூட இந்த பிரச்னை ஏற்படும். சில நேரங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பராமரிப்பு பணியில் இருப்பதால் சிக்னல் தடைபடலாம். சிம் கார்டு பழுதடைந்திருந்தால் இந்த பிரச்னை ஏற்படலாம். நீண்ட காலமாக ஒரு சிம் கார்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அவற்றை மாற்றுவது அவசியம். சிம் ஸ்லாட் பழுதடைந்திருந்தாலும் நமக்கு இந்த பிரச்னை ஏற்படலாம்.

இதையும் படிக்க : ஆண்ட்ராய்டு போன் மெதுவாக இயங்குகிறதா? இந்த 7 எளிய டிரிக்ஸை டிரை பண்ணுங்க

நெட்வொர்க்கை திரும்ப பெற எளிய வழிகள்

  • போனை உடனடியாக ரீஸ்டார்ட் செய்யவும். ஒருமுறை ரீபூட் செய்தால் பெரும்பாலும் சிம் கார்டு அருகில் உள்ள டவரில் மீண்டும் இணைகிறது.
  • சிம் கார்டை வெளியே எடுத்து அதனை மென்மையான துணியால் துடைத்து பின்னர் மீண்டும் பொருத்தவும்.
  • ஏரோபிளேன் மோடை 10 விநாடிகள் இயக்கி பின்னர் ஆன் செய்தால் நெட்வொர்க் மீண்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
  • சரியான நேட்வொர்க் டைப்பை தேர்வு செய்யவும். இதற்காக உங்கள் போனில் Settings – Mobile Network – 4G/5G போன்ற சரியான நெட்வொர்க்கை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் நெட்வொர்க் தடையில்லாமல் கிடைக்கும்.
  • சாஃப்ட்வேர் அப்டேட் செய்யவும். போனின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்வதன் மூலம் நெட்வொர்க் தடைபடும் பிரச்னை குறைும்.
  • சிம் கார்டை ஒருமுறை வேறு போனில் பொறுத்தி முயற்சிக்கவும். அங்கு நன்றாக வேலை செய்தால், பிரச்னை உங்கள் போனில் தான் என்பது தெளிவாகும். உடனடியாக அருகில் உள்ள சர்வீஸ் சென்டரில் கொடுத்து இந்த பிரச்னைையை சரி செய்யலாம்.
  • இந்த பரிசோதனைகளுக்கு பிறகும் நெட்வொர்க் பிரச்னை சரியாகவில்லை என்றால் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இதையும் படிக்க : ஸ்டோரேஜ் சிக்கலை சரிசெய்ய ஜிமெயிலில் வந்தாச்சு Manage Subscriptions அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?

நாம் பயன்படுத்தும் சிம் கார்டு பழையதாக இருந்தால் அதனை உடனியாக மாற்றுவது நல்லது. சிம் கார்டு பழையதாக இருந்தால் நெட்வொர்க பிரச்னை ஏற்படலாம். எனவே வளைந்து சேதமடைந்திருந்தால், அடிக்கடி நெட்வொர்க் பிரச்னை இருந்தால் உடனடியாக சிம் கார்டை மாற்றுவது நல்லது.