மிக குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது ரியம்லி பி4 லைட் 4ஜி!

Realme P4 Lite 4G Smartphone Introduced In India | இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரியலி பி4 லைட் என்ற ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

மிக குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது ரியம்லி பி4 லைட் 4ஜி!

ரியல்மி பி4 லைட் 4ஜி

Published: 

21 Feb 2026 11:59 AM

 IST

இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக ரியல்மி (Realme) உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை (Realme P4 Lite Smartphone) அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ரியல்மி நிறுவனம் பி4 சீரீஸில் சில ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது இந்த பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்த ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6,300 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 15 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் அம்சம் மற்றும் 6 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டு இருந்தாலும், இதன் தோற்றம் மிகவும் மெல்லியதாக உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 7.94 mm ஸ்லிம் மற்றும் 201 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க ஷூட்டர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாடலான 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.9,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும் நபர்களுக்கு ரூ.1,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஏஐ மையப்படுத்தி அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்.. அட இத்தன சிறப்பு அம்சங்களா?

இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24, 2026 முதல் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்