அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ஓப்போ எஃப்33 சீரீஸ்.. முழு விவரம் இதோ!

Oppo F33 Series Smartphones Launched In India | ஓப்போ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஓப்போ எஃப்33 சீரீஸ் ஸ்மாட்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ஓப்போ எஃப்33 சீரீஸ்.. முழு விவரம் இதோ!

ஓப்போ எஃப் 33 சீரீஸ்

Updated On: 

16 Apr 2026 23:05 PM

 IST

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஓப்போ (Oppo) ஸ்மார்ட்போன் நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது ஓப்போ எஃப்33 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Oppo F33 Series Smartphones) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஓப்போ எஃப்33 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ எஃப்33 சீரீஸ் ஸ்மார்ட்போன்

ஓப்போ நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஓப்போ எஃப்33 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 7,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. பல வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசான், பிளிப்கார்ட், ஓப்போ இ ஸ்டோர்கள் ஆகியவற்றில் கிடைக்கும்.

இதையும் படிங்க : அசத்தல் அம்சங்கள்.. ஆனால் பட்ஜெட் விலை.. இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்!

ஓப்போ எஃப்33 சீரீஸ் ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஓப்போ எஃப்33 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் 6.57 இன்ச் Flat AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 1400 நிட்ஸ் வரை பிரைட்னஸ் வழங்குகிறது. இந்த சீரீஸில் உள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளன. இதில் ஓப்போ எஃப்33 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி அல்ட்ரா வைட் முன்பக்க கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதில் ஆட்டோ ஃபோகஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : போன் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இந்த 6 டிரிக்ஸை டிரை பண்ணுங்க!

இந்த ஸ்மார்ட்போனில் 7,000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது 80 வாட்ஸ் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்குகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஒப்போ எஃப்33 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.40,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.37,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப்33 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.37,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.34,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.31,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி