நத்திங் முதல் ரியல்மி வரை.. அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!

Smartphones Price Increased | இந்திய சந்தையில் ஏராளமனா ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், நத்திங், ரியல்மி, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்கள் விலை உயர்த்தப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நத்திங் முதல் ரியல்மி வரை.. அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!

ஒன்பிளஸ் 15 சீரீஸ்

Updated On: 

03 May 2026 14:35 PM

 IST

இந்தியாவில் சில முன்னணி ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன. நத்திங் (Nothing), ஒன்பிளஸ் (OnePlus), ரியல்மி (Realme) உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சில முக்கிய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான விலைகளை மாற்றி அமைத்துள்ளன. இந்த நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விலை உயர்த்தப்பட்ட நத்திங் ஸ்மார்ட்போன்கள்

நத்திங் நிறுவனம் தனது முக்கிய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

  • ரூ.24,999 ஆரம்ப விலையாக கொண்டிருந்த நத்திங் போன் 3a தற்போது ரூ.27,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நத்திங் போன் 4a ஸ்மார்ட்போன் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.40,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • நத்திங் போன் 4a ஸ்மார்ட்போன் வேரியண்டுகளின் அடிப்படையில் ரூ.44,999 முதல் ரூ.50,999 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : இனி யூடியூப் பயன்படுத்தும்போது வேறு செயலியும் பயன்படுத்தலாம்.. வந்தது Picture In Picture அம்சம்!

ஒன்பிளஸ் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15R ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

  • 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ரூ.72,999-ல் இருந்து ரூ.77,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ரூ.79,999-ல் இருந்து ரூ.85,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் ரூ.50,499-ல் இருந்து ரூ.52,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போன் ரூ.55,999-ல் இருந்து ரூ.57,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?

ரியல்மி 6 ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியது

ரியல்மி தனது 6 மாடல் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது ரியமி C71 4G, ரியல்மி 15x 5G, ரியல்மி 15T 5G, ரியல்மி C85 5G, ரியல்மி 16 Pro 5G மற்றும் ரியல்மி 16 Pro+ 5G ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.11,999 முதல் ரூ.44,999 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..