ஜிபேயில் உருவெடுத்துள்ள புதிய மோசடி?.. இணையத்தில் வைரலாகும் தகவல் உண்மையானதா?

New Scam In G Pay | இந்தியாவில் விரைவாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள ஏராளமான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக ஜிபே உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி நொடி பொழுதில் பண பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால் பலரும் இதனை தேர்வு செய்கின்றனர்.

ஜிபேயில் உருவெடுத்துள்ள புதிய மோசடி?.. இணையத்தில் வைரலாகும் தகவல் உண்மையானதா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 Apr 2026 21:25 PM

 IST

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் அம்சம் தான் டிஜிட்டல் பேமெண்ட் முறை (Digital Payment Method). முன்பெல்லாம் ஏதேனும் பொருளை வாங்க வேண்டும் என்றால் கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், இந்த டிஜிட்டெல் பேமெண்ட் முறை மூலம் சிங்கிள் கிளிக்கில் பணம் செலுத்திவிடலாம். இவ்வாறு டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் பணம் செலுத்த அதிகம் பயன்படுத்தும் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலியாக ஜிபே (Gpay) உள்ளது. இது  ஒருவர் மற்றொருவருக்கு மிக விரைவில் பணத்தை அனுப்ப பயனுள்ளதாக உள்ளது. அதுமட்டுமன்றி மொபைல் ரீச்சார்ஜ், கேஸ் சிலிண்டர் புக்கிங், டிவி ரீச்சார்ஜ் உள்ளிட்டவற்றையும் இதில் சுலபமாக செய்து முடித்துவிடலாம்.

இத்தனை அம்சங்களை கொண்ட இந்த ஜிபே செயலியை ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம்  பயன்படுத்தும் நிலையில், அதில் புதிய வகை மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன மோசடி, அந்த மோசடி உண்மைதானா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிபே செயலியில் உருவெடுத்துள்ள புதிய மோசடி?

ஜிபே செயலியில் பணம் அனுப்பிய பயனர்கள் சிலர் புதிய வகை மோசடியை எதிர்க்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது, பணம் அனுப்பியவர்களின் பட்டியலுக்கு அருகே இதய வடிவில் ஒரு புதிய அம்சம் உருவாகியுள்ளதாகவும், அதனை தொடும் பட்சத்தில் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணமும் எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஜிபே பயனர்கள் பாதுகாப்பாக இருக்க கோரி சமூல வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க : இனி இரைச்சல் இல்லாமல் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்.. வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!

பாக்கெட் மணி அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்

கூகுள் பே புதியதாக பாக்கெட் மணி (Pocket Money) என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் தான் மோசடி அம்சம் என போலி தகவல்கள் பரவி வருகின்றன. அது முற்றிலும் தவறான ஒன்று. பயனர்களின் பண பரிவர்த்தனை வசதிக்காக இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் 5 நபர்கள் வரை தங்களது கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியும். இந்த பாக்கெட் மணி அம்சத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்யக்கூடாத தவறுகள்!

இந்த அம்சத்தை பயன்படுத்தி ஒருவர் மற்றொருவரின் வங்கி கணக்கில் இருந்து தங்களது தேவைகளுக்காக பணம் எடுத்துக்கொள்ள முடியும். முதன்மை கணக்காளரின் அனுமதியுடன் பணத்தை எடுப்பது, அனுமதி இல்லாமல் பணத்தை எடுப்பது என இரண்டு ஆப்ஷன்கள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?