ஏஐ முதல் ஹியூமனாய்டு ரோபோ வரை… ரிலையன்ஸ் இண்டெலிஜென்ஸை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி

Reliance Intelligence : ரிலையன்ஸ் குழுமத்தின் 48வது வருடாந்திர சந்திப்பில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி , ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிறுவனம் ஏஐ முதல் ஹியூமனாய்டு ரோபோ வரை பல அறிவுப்புகளை முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

ஏஐ முதல் ஹியூமனாய்டு ரோபோ வரை... ரிலையன்ஸ் இண்டெலிஜென்ஸை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

Updated On: 

29 Aug 2025 20:06 PM

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற புதிய துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக ஆகஸ்ட் 29, 2025 அன்று நடைபெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் 48வது வருடாந்திர சந்திப்பில் தெரிவித்தார். இந்த புதிய நிறுவனத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக கூகுள் மற்றும் மெட்டா (Meta) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவை மனித ரோபோ உற்பத்தியில் முன்னணி நாடாக மாற்றும் நோக்கில் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் நான்கு முக்கிய நோக்கங்கள்

இந்த நிகழ்வில் பேசிய முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் நிறுவனத்தின் 4 நோக்கங்களை கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,

  • இந்தியாவில் ஏஐ முழுமையாக கற்கவும், அது குறித்து ஆய்வு செய்யும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் ஒரு டேட்டா சென்டரை உருவாக்குவது.
  • உலகின் தலைசிறந்த டெக் நிறுவனங்கள் மற்றும் அனைவருக்கும் ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் குழுக்களையும் சேர்த்து பணியாற்றுவது.

இதையும் படிக்க : முகேஷ் அம்பானியின் பெரிய அறிவிப்புகள் வரலாம்.. ரிலையன்ஸ் பொதுக்கூட்டம் இன்று!

  • பொது மக்கள், சிறிய நிறுவனங்கள் எளிமையாக பயன்படுத்தக் கூடிய வகையில் நம்பகமான ஏஐ சேவைகளை வழங்குதல். மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கான தீர்வுகளை உருவாக்குதல்.
  • உலகின் தலை சிறந்த ஆராய்ச்சியாளர்கள், பொறியியல் வல்லுநர்கள், டிசைனர்கள் மற்றும் தயாரிப்பு குழுக்களுக்கான இடத்தை உருவாக்கி, அவர்களது யோசனைகளை கண்டுபிடிப்புகளாக மாற்றுவது. மேலும் இதன் மூலம் இந்தியாவிற்கும் உலகிற்கும் தீர்வுகள் வழங்குவது.

கூகுள் மற்றும் மெட்டாவுடன் இணைந்து செயல்படும்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து வணிகங்களும் ஏஐ மூலம் மாற்றம் செய்ய கூகுளுடன் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்தார். இதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் கூகுள் கிளௌட் மூலம் உலக தரத்திலான ஏஐ வசதிகளை கொண்டு ஜாம்நகர் கிளவுட் பகுதி உருவாக்கப்படும் என்றார். .  மெட்டா நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கி ரிலையன்ஸ் வணிக செயல்பாடுகளுக்கு ஒரு ஒப்பன் ஏஐ கருவிகளை உருவாக்கவுள்ளது.

இதையும் படிக்க : இனி இலவசமாக ஏஐ வீடியோக்களை உருவாக்கலாம் – எப்படி தெரியுமா?

இந்த நிலையில் செயற்கை நுண்றிவு துறையில் இன்னொரு ஆச்சரியமான முன்னேற்றம் ரோபோட்டிக்ஸ். குறிப்பாக ஹியூமனாய்டு ரோபோ துறையயில் ஆச்சரியமான முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் உற்பத்தி தானாக செய்யும், கிடங்குகள் தானாக இயங்கும், சப்ளைகள் அனைத்தும் தானாகவே நடைபெறும், மருத்துவமனைகள் துல்லியமான பராமரிப்பு பணிகள் நடைபெறும் வாய்ப்பு எதிர்காலத்தில் உருவாகும். இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் ஹியூமனாய்டு ரோபோவின் மையமாக மாற்றும் வகையில் அதில் முதலீடு செய்யப்படவிருக்கிறது. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி மேம்படும், வேளாண்மை வளர்ச்சியடையும், வேலை வாய்ப்பு உருவாகும். இளம் தலைமுறையினருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றார்.