Reliance AGM 2025 : முகேஷ் அம்பானியின் பெரிய அறிவிப்புகள் வரலாம்.. ரிலையன்ஸ் பொதுக்கூட்டம் இன்று!
Reliance 48th Annual General Meeting : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 48வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) ஆகஸ்ட் 29, 2025 இன்று நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தை டிஜிட்டல் உலகத்தினர் பெருமளவில் எதிர்பார்த்துள்ளன. முகேஷ் அம்பானியின் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன்று (2025, ஆகஸ்ட் 29) தனது 48வது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் ஆண்டு பொதுக் கூட்டம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் உரையுடன் தொடங்கும். தனது உரையில், முகேஷ் அம்பானி ஆர்ஐஎல்லின் செயல்திறன், நிறுவனத்தின் எதிர்காலக் கண்ணோட்டத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வரலாம் எனவும் டிஜிட்டல் உலகம் எதிர்பார்க்கிறது
RIL AGM 2025 நேரலையில் பார்ப்பது எப்படி?
48வது வருடாந்திர பொதுக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் அல்லது பிற ஆடியோ-விஷுவல் மூலம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வீட்டிலிருந்தே நேரடியாகப் பார்க்கவும் கேட்கவும் விரும்பினால், https://jioevents.jio.com/meetingportal/rilagm/joinmeeting என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் AGM-ஐ நேரடியாகப் பார்க்கலாம்.
இது தவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வருடாந்திர பொதுக் கூட்டத்தையும் நீங்கள் ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான ரிலையன்ஸ் அப்டேட்ஸ் மூலம் பார்க்கலாம். நிகழ்வு மதியம் 2 மணிக்கு தொடங்கிய பிறகு, வீடியோவில் தெரியும் பிளே பட்டனை அழுத்துவதன் மூலம் இங்கிருந்து நேரடியாக நிகழ்வை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம்.




Also Read: இலவச யூடியூப் பிரீமியம் முதல் கேஷ்பேக் வரை.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது பிளிப்கார்ட் பிளாக்!
அறிவிப்புகள் எதிர்பார்ப்பு
48வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), முகேஷ் அம்பானி FMCG உத்தி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜியோ IPO மற்றும் RIL குழுமத்தின் திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. AGM இல் வெளியிடப்படும் பிற அறிவிப்புகளில் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திட்டமான JioBrain மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் Jioவின் 5G மற்றும் 6G உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, சமீபத்தில் சில ஊடக அறிக்கைகள் ஜியோ ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஐபோனில் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (RCS) செய்தியிடலை அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளன. இது குறித்த தகவல்களை இன்று நடைபெறும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வழங்கலாம்.
Also Read : இன்ஸ்டாகிராமில் இனி Part-2 வீடியோவை தேடி அலைய வேண்டாம்.. வந்தது அசத்தல் அம்சம்!
தற்போது, வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது வெளியிடப்படும் அறிவிப்புகளின் அதிகாரப்பூர்வ விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் அனைத்து துறைகளிலும் காலூன்றி இருப்பதால் அனைத்து தரப்பினருமே இந்த கூட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. குறிப்பாக டிஜிட்டல் உலகத்துக்கு ரிலையன்ஸ் தரப்பில் இருந்து மேலும் அறிவிப்பு வரலாம் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது