Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கள்ளக்காதலை எதிர்த்த மகன்.. பணத்துடன் பிடித்த வாழ்க்கையை வாழ தாய் போட்ட மாஸ்டர் பிளான்.. திடுக்கிடும் பின்னணி!

Kanpur Mother Kills Son for Insurance | உத்தர பிரதேசத்தில் தனது மகன் கள்ளக்காதலை எதிர்த்ததால் அதிக பணத்துடன் காதலனுடன் பிடித்த வாழ்க்கையை வாழ தாய் கொடூர திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலை எதிர்த்த மகன்.. பணத்துடன் பிடித்த வாழ்க்கையை வாழ தாய் போட்ட மாஸ்டர் பிளான்.. திடுக்கிடும் பின்னணி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Nov 2025 22:07 PM IST

லக்னோ, நவம்பர் 01 : உத்தர பிரதேசம் (UP – Uttar Pradesh), கான்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கத்பூர் பகுதியை சேர்ந்தவர் மம்தா சிங். இவருக்கு பிரதீப் சிங் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். மம்தாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், மம்தா சிங்கிற்கு மயங் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு அது இருவருக்கும் இடையே நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த உறவு பிரதீப்புக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. எனவே மயங் உடனான உறவை துண்டிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், மம்தா தனது காதலை கைவிடாமல் இருந்து வந்துள்ளார்.

கள்ளக்காதலை கைவிட சொன்ன மகன் – தாய் செய்த கொடூரம்

கள்ளக்காதலை கைவிட தனது மகன் வலியுறுத்தி வந்த நிலையில், மம்தா தனது மகன் மீது ரூ.1 கோடி மதிப்பிலான 4 இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்துள்ளார். அதாவது மகனை கொலை செய்துவிட்டு அதில் வரும் பணத்தை வைத்து தனது காதலனுடன் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழலாம் என மம்தா நினைத்துள்ளார். இந்த திட்டத்தை தனது காதலனுடனும் தெரிவித்துள்ளார். அதன்படி, மம்தா அவரது காதலன் மயங் மற்றும் அவரின் சகோதரர் ரிஷி ஆகியோர் இணைந்து பிரதீப்பை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு.. சடங்கு செய்ய மறுத்ததால் மனைவியின் முகத்தில் சுட சுட மீன் குழம்பை ஊற்றிய கணவன்!

கூட்டு சதி – மகனை கொலை செய்த கொடூர தாய்

இந்த நிலையில், மம்தா தனது மகனை சாப்பிடுவதற்காக இரவு வீட்டிற்கு அழைத்துள்ளார். தாயின் அழைப்பை ஏற்று பிரதீப் வீட்டுக்கு சென்றுக்கொண்டு இருந்த நிலையில், அவரை வழி மறித்த மயங் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், பிரதீப்பை சரமாரியாக சுத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை சாலை ஓரம் வீசிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க : திருமணமாகி 10 நாட்கள் கூட மகிழ்ச்சியாக இல்லை.. வீடியோ பதிவு செய்துவிட்டு புதுமண பெண் தற்கொலை!

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மயங் சிக்கினார். அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் உண்மையை முழுவதுமாக கூறியுள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மம்தாவை வலை வீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.