பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட IQOOZ11x!

IQOOZ11x Smartphone Introduced In India | IQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் IQOOZ11x ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட IQOOZ11x!

Iqooz11x ஸ்மார்ட்போன்

Published: 

13 Mar 2026 23:17 PM

 IST

IQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது IQOOZ11x ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், IQOO நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

IQOOZ11x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2025, ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட IQOOZ10x ஸ்மார்ட்போன் வெற்றி பெற்றதை அடுத்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேட்டரி, சிப்செட், கேமரா உள்ளிட்ட அம்சங்களில் சில முக்கிய அப்டேட்டுகளை கொண்டுள்ளது. அதாவது 8 மெகாபிக்சல் கேமராவில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிசல் கேமராவை மாற்றத்தை எதிர்க்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : தனித்தனி ரிங்டோன் முதல் பின் சாட்கள் வரை.. வாட்ஸ்அப்பில் கட்டணத்துடன் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்!

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போன் 6.76 இன்ச் LCD டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 7,200 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : லேப்டாப், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு?.. கண்டுபிடித்து சரி செய்வது எப்படி?

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999 ஆக உள்ளது. இதேபோல 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜின் படத்துக்கு அனிருத்தின் சம்பளம் இவ்வளவா?
பிரபாஸ் மற்றும் எகோ பட இயக்குநர் சந்திப்பு
தன்னை தாக்க வந்த சிறுத்தையை கற்களால் அடித்து கொன்ற 18 வயது இளைஞர்..
வாடிக்கையாளரை தாக்கிய ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. நடந்தது என்ன?