ஃபிளிப்கார்டில் ஐபோன் 16ஐ 50,000க்குள் வாங்கலாம்! எப்படி தெரியுமா?
Flipkart Big Billion Days : ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23, 2025 முதல் துவங்குகிறது. இதில் ஐபோன் 16 போனை ரூ.50,000க்குள் சலுகை விலையில் வாங்க முடியும். அது எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஐபோன் 16
இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 வருகிற செப்டம்பர் 23, 2025 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இதில் ஃபிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளாக் உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 22, 2025 முதல் 24 மணி நேரத்துக்கு முன்பாகவே சலுகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகை ஆப்பிள் ஐபோன் 16 மாடல் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 16 போன் ரூ.1,19,900 விலையில் அறிமுகமான நிலையில் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் வெறும் ரூ.51,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.50,000க்குள் ஐபோன் 16 வாங்குவது எப்படி?
ஐபோன் 16 ஆஃபரில் ரூ.51,999 ஆக விற்கப்பட்டாலும், அதனுடன் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால், ரூ. 50,000க்குள் விலை குறையக் கூடும். அதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இதையும் படிக்க: ஐபோன் ஏர் முதல் ஏர்பாட்ஸ் புரோ 3 வரை… ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 5 சிறப்பான விஷயங்கள் – அப்படி என்ன ஸ்பெஷல்?
- ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால் உங்களுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் ரூ.4,000 வரை சேமிக்க முடியும்.
- ஃபிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 5 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கக் கூடும். இதன் மூலம் அதிகபட்சம் ரூ. 4000 வரை சேமிக்கலாம்.
- ஆக்சிஸ் பேங்க் டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் 5 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும்.
- அதே போல ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் கூடுதலாக ரூ.1,053 தள்ளுபடியும் கிடைக்கும்.
பழைய ஸ்மார்ட்போன்களை கொடுத்து வாங்கினால் கூடுதல் தள்ளுபடி
மேலும் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் முறையில் கொடுத்து வாங்கினால் கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும்.
- ஐபோன் 15 எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கினால் உங்களுக்கு போனின் மதிப்புக்கு ஏற்ப ரூ.27,000 வரை சிறப்பு தள்ளுபடிகள் கிடைக்கும்.
- ஐபோன் 14 எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கினால், உங்கள் போனின் மதிப்புக்கு ஏற்ப ரூ.24,000 வரை சிறப்பு தள்ளுபடிகள் நமக்கு கிடைக்கும்.
இதன் மூலம் ஐபோன் 16 ஐ ரூ.50,000க்கும் குறைவாக வாங்கலாம்.
ஐபோன் 16புரோ, புரோ மேக்ஸ் மாடல்களுக்கும் சலுகை
ஐபோன் 16 பேசிக் மாடல்களுக்கு மட்டுமல்லாமல், ப்ரீமியம் மாடல்கலான ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : Apple iPhone 17 : அறிமுகமானது ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. வேரியண்ட் வாரியாக விலை பட்டியல் இதோ!
ஐபோன் 16 புரோ
ஐபோன் 16 புரோவின் அறிமுக விலை ரூ.1,19, 900 என்ற நிலையில், ஃபிளிப்கார்டில் ரூ.74,999 வரை சலுகை விலையில் கிடைக்கும். மேலும் வங்கி சலுகையுடன் ரூ.69,999க்கு கிடைக்கும்.
ஐபோன் 16 புரோ மேக்ஸ்
இதன் அறிமுக விலை ரூ.1,44,900 என்ற நிலையில் சலுகை விலை ரூ.94, 999க்கு கிடைக்கும். வங்கி சலுகையுடன் ரூ.89,999க்கு கிடைக்கும்.
ஐபோன் 14 வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை முறையிலும் வாங்கலாம். மாதம் ரூ.1,829 செலுத்தியும் போன் வாங்கலாம்.