உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கும் இன்ஸ்டாகிராமின் புதிய மேப் வசதி – எப்படி தவிர்ப்பது?

Instagram Map Feature Update : இன்ஸ்டாகிராமில் பயனர்களின் லொகேஷனை பகிரும் வகையில் மேப் வசதியை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கவிருக்கும் நிலையில் மக்களுக்கு பிரைவசி குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கும் இன்ஸ்டாகிராமின் புதிய மேப் வசதி - எப்படி தவிர்ப்பது?

மாதிரி புகைப்படம்

Published: 

10 Aug 2025 18:50 PM

பிரபலமான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) அதன் பயனர்களுக்காக ரீபோஸ்ட் வசதி, ஃபிரெண்ட் மேப் வசதி மற்றும் ஃபிரெண்ட் ஃபீட்  என 3 வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்  மேப், வசதி தற்போது அமெரிக்காவில்  (America) மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இது இந்தியாவிலும் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் நேரடியாக உங்கள் லொகேஷனை பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இதனை உங்கள் இன்ஸ்டாகிராம் டைரக்ட் மெசேஜ் பகுதியில் அனுப்பலாம்.  தற்போது இதனை பயனர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் அவற்றை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

பிரைவசி குறித்த கவலைகள்

நமது லொகேஷனை பகிரும்போது நாம் எங்கே இருக்கிறோம் என நமது நண்பர்கள் அறிய உதவும். இது பிரைவசி மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக இது பெண்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.  இதன் மூலம் நமது லொகேஷனுக்கு ஏற்ப விளம்பரங்கள் செய்வது, ஸ்டாக்கிங் (Stalking) பிரச்னைகள், தாக்குதல் போன்ற அபாயங்கள் ஏற்படக் கூடும். எனவே இது பயனர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : வாட்ஸ்அப் காலை மிஸ் பண்ணிட்டீங்களா? இனி கவலை இல்லை – வெளியான புது அப்டேட்

இன்ஸ்டாகிராமின் கட்டுப்பாடுகள்

ஆனால் இதனை கருத்தில் கொண்டு இன்ஸ்டாகிராம் சில கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது. அதன் படி இந்த புதிய மேப்ஸ் வசதியை யாருடன் பகிரலாம் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். குறிப்பாக இதுகுறித்து 3 விதமான ஆப்சன்களை இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களுக்கு வழங்கும்.

  • உங்கள்  அனைத்து ஃபாலோயர்களுடன் பகிரலாம்
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்களுடன் மட்டும் பகிரலாம்.
  • யாருடனும் பகிராமல் இருக்கலாம்.

இந்த 3 ஆப்சன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். நம் ஃபாலோயர்களுக்கு காட்டலாம் என்ற ஆப்சனைத் தெர்ந்தெடுத்தால், நம் லொகேஷன் அனைவருக்கும் காட்டப்படும். யாருடனும் பகிர வேண்டாம் என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்தால் நம் லொகேஷன் யாருக்கும் காட்டப்படாது. ஆனால் விளம்பரதாரர்களுக்கு நம் லொகேசன் காட்டப்படுமா என்பது குறித்து இந்த விளக்கமும் அறிவிக்கப்படவில்லை.  இன்ஸ்டாகிராமில் ப்ளூ ஆரோ காட்டப்பட்டால், நம் இன்ஸ்டாகிராம் பகிரப்படுகிறது என்று அர்த்தம். அதே நேரம் சிகப்பு புளளி இருந்தால் நம் லொகேஷனை பகிரவில்லை என்று அர்த்தம்.

இதையும் படிக்க : இன்ஸ்டாவில் லைவ் ஸ்டிரீமிங் செய்யும் நபரா நீங்கள்.. இந்த புதிய விதியை தெரிந்துக்கொள்ளுங்கள்!

லொகேஷனை எப்படி பகிராமல் தவிர்ப்பது ?

பிரைவசி காரணங்களுக்காக இன்ஸ்டாகிராமில் லொகேஷனை பகிர விரும்பவில்லை என்றால் அந்த விருப்பத்தை ஆஃப் செய்யலாம். அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

  • இன்ஸ்டாகிராமில் மேல் வலப்பக்கத்தில் உள்ள ஆரோவை கிளிக் செய்யவும்.
  • உங்களின் இன்பாக்ஸ் மேல் பகுதியில் settings gear icon-ஐ திறக்கவும்.
  • அதில் லோகேசன் ஷேரிங் ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
  • Update கொடுத்தால் உங்கள் விருப்பம் சேமிக்கப்படும்.