சந்தமே இல்லாமல் வாட்ஸ்அப்பில் நடக்கும் சைபர் தாக்குதல்.. Ghost Pairing குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு!

Ghost Pairing In WhatsApp | வாட்ஸ்அப்பில் மோசடி மற்றும் சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் கோஸ்ட் பேரிங் என்ற சைபர் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், அது குறித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்தியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

சந்தமே இல்லாமல் வாட்ஸ்அப்பில் நடக்கும் சைபர் தாக்குதல்.. Ghost Pairing குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Dec 2025 14:31 PM

 IST

தொழில்நுட்ப வளர்ச்சி (Technology Development) பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கினாலும், அதில் சில ஆபத்துகளும் உள்ளன. அத்தகைய ஆபத்துகளில் ஒன்றுதான் சைபர் தாக்குதல்கள் (Cyber Attacks). இத்தகை சைபர் தாக்குதல்களின் மூலம் தகவல்கள் திருடப்பட்டு, அதன் மூலம் மோசடிகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்று வருவதாக இந்தியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைச்சகம் (India’s National Cyber Security Agency) கூறியுள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் சைபர் தாக்குதல் குறித்து அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் நடைபெறும் சைபர் தாக்குதல்

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக உள்ளது தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப். இந்த செயலியை கோடிக்கணக்கான இந்தியர்களும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இந்தியர்களின் அன்றாட வாழ்வின் முக்கிய செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இனி டிவியிலும் இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்கலாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

வாட்ஸ்அப்பின் மொத்த கண்ட்ரோலையும் எடுக்கும் சைபர் தாக்குதல்

வாட்ஸ்அப் செயலியில் மோசடி மற்றும் சைபர் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. ஆனால், இதுவரை நடந்த சைபர் தாக்குதல்கள் எல்லாம் ஓடிபி, லிங்க் ஆகியவற்றின் மூலம் நடைபெற்றன. ஆனால், தற்போது நடைபெறும் சைபர் தாக்குதலுக்கு பாஸ்வேர்ட் அல்லது சிம் கார்டு என எதுவும் தேவைப்படாது என்று கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள டிவைஸ் லிங்கிங் (Device Linking) அம்சத்தை பயன்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான அட்டகாசமான 4 Foldable Smartphones.. சிறப்பு அம்சங்கள் என்ன?

எந்த வித எஸ்எம்எஸ், சிம் கார்டு ஸ்வேப் ஆகியவை இல்லாமல் நடைபெறும் இந்த மோசடிக்கு கோஸ்ட் பேரிங் (Ghost Pairing) என பெயரிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் கணக்கில் உள்ள தகவல்கள், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவை திருடப்பட்டு அதன் மூலம் மோசடிகள் நடைபெறுவதாக கூறியுள்ளது. இந்த மோசடி குறித்து பாதுகாப்பாக இருக்க தேசிய சைபர் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை