Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rail One: ரெயில் ஒன் சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே – அப்படி என்ன ஸ்பெஷல்?

RailOne App Update : இந்திய ரயில்வே, பயணிகள் சேவையை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக, ரயில்ஒன் எனும் புதிய சூப்பர் ஆப்பை அறிமுகம் செய்திருக்கிறது.இது மூலம் பயணிகள் ஒரே செயலியில் பல சேவைகளைப் பெற முடியும்.

Rail One: ரெயில் ஒன் சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே – அப்படி என்ன ஸ்பெஷல்?
ரயில்ஒன் ஆப்
karthikeyan-s
Karthikeyan S | Published: 01 Jul 2025 20:32 PM

இந்திய ரயில்வே (Indian Railway) என்பது உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயணிகளை தினமும் பாதுகாப்பாக கொண்டு செல்லும் மிக முக்கியமான போக்குவரத்து சேவையாக இது விளங்குகிறது. குறைந்த செலவில் பயணிக்க முடியும், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது என்பதால் பலரது தேர்வாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய ரயில்வே, டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்ஒன் (RailOne) எனும் புதிய ‘சூப்பர் ஆப்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில்ஒன் சூப்பர் ஆப் என்றால் என்ன?

கடந்த 2025, ஜூலை 1 அன்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் ரயில்ஒன் எனும் புதிய மொபைல் செயலி வெளியிடப்பட்டது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்காக உருவாக்கப்பட்ட  அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு சூப்பர் ஆப். பயணிகள் பல்வேறு ரயில்வே செயலிகளை தனித்தனியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி இல்லை. ஏனெனில் எல்லா சேவைகளும் ஒரே செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ரயில்ஒன் ஆப் குறித்து பிரெஸ் இன்ஃபர்மேஷன் பீரோ வெளியிட்ட எக்ஸ் பதிவு

 

இந்த ஆப்பின் முக்கிய அம்சங்கள்

  • முன்பதிவு / முன்பதிவு இல்லாத டிக்கெட் பதிவு

  • பிளாட்பாரம் டிக்கெட் பெறும் வசதி

  • பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், பயண நிலை, கோச் நிலை ஆகியவற்றை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.

  • உணவு ஆர்டர், ரீஃபண்ட் கோரிக்கை எளிதாக மேற்கொள்ளலாம்.

  • Rail Madad மூலம் புகார்கள் மற்றும் தகவல்களைப் பெறலாம்.

  • பார்சல் மற்றும் சரக்குப் போக்குவரத்து தகவல்கள்

  • RWallet என்ற டிஜிட்டல் வாலட் வசதி

பாதுகாப்பான சேவையை வழங்கும் ரயில்ஒன்

பயனர்கள் ரயில் கனெக்ட் அல்லது யுடிஎஸ் செயலி லாகின் விவரங்களைக் கொண்டு நேரடியாக உள்நுழையலாம். புதிய பயனர்கள் மொபைல் எண் மற்றும் ஓடிபி மூலம் பதிவு செய்யலாம். இதில் mPIN, பயோமெட்ரிக் சோதனை ஆகியவை பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டிக்கெட் முன்பதிவு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்

  • இந்த ரயில் ஒன் அப்டேட்டுடன் மேலும் புதிய அப்டேட்டுகளையும் இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கிறது. அதன் படி
  • ரசர்வேஷன் சார்ட் 8 மணி நேரத்திற்கு முன் வெளியிடப்படும்.
  • இனி தட்கல் டிக்கெட் பெற ஆதார் கட்டாயம். குறிப்பாக டிஜிலாக்கர் வழியாக அப்டேட் செய்வது கட்டாயம்.
  • 2025 டிசம்பருக்குள், ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யக்கூடிய புதிய கணினி அமைப்பை ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.

 சர்வதேச தரத்தில் பயண அனுபவம்

ரயில்ஒன் செயலி பயணிகள் தேவைகளை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், டிக்கெட் முன்பதிவு, புகார்களுக்கு உடனடி தீர்வு, உணவு சேவைகள் போன்றவை விரைவாகவும் எளிமையாகவும் மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வசதிகளை ஒருங்கிணைக்கும் இந்த செயலி, பயண அனுபவத்தை முழுமையாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும், பயணிகள் ஒவ்வொரு வசதிக்கும் தனித்தனி ஆப்களை பயன்படுத்தி வந்தனர். இனி பயணிகள் பல செயலிகளை பயன்படுத்த தேவையில்லை. ரயில்ஒன் செயலி இந்திய ரயில்வேயின் டிஜிட்டல் முன்னேற்றத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.