நம் பெயர் தெரியாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி? இதோ 3 டிரிக்ஸ்
WhatsApp Trick : சிலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்க்கும் போது நம் பெயர் தெரியக் கூடாது என நினைப்பார்கள். அதனை மூன்று வழிகளில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நம் பெயர் தெரியாமல் பார்க்க முடியும். அது குறத்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கல்வி, வேலை என இன்று வாட்ஸ்அப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப்பை பாதுகாப்பாக பயன்படுத்த பல விஷயங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் நாம் ஒருவரின் வாட்ஸ்அப் (WhatsApp) ஸ்டேட்டஸ் அவர்களுக்குத் தெரியாமல் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பலருக்கு இதை எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸைப் பார்க்க மூன்று வழிகள் உள்ளன. அவை என்ன?, அதை எப்படி இயக்குவது? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஸ்டேட்டஸ் பார்க்கும் ஆப்சனை நீக்கலாம் (Disable Read Receipt)
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் ஸ்டேட்டஸ் பார்க்கும் ஆப்சனை நீக்க அனுமதிக்கிறது. இது யாருக்கும் தெரியாமல் செய்திகளைப் படிக்க உதவுகிறது. இந்த அம்சம், ஒரு பயனரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்க்கும்போது, உங்கள் பெயர் அவர்களுக்கு தோன்றாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
இதையும் படிக்க : பயனர்கள் பல நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த அம்சத்தை அறிமுகம் செய்தது Snapchat.. என்ன தெரியுமா?
ஆண்ட்ராய்டு பயனர்கள்
- வாட்ஸ்அப் திறந்து Settings செல்லவும்
- Account – Privacy என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Read Receipts என்ற ஆப்சனை தேர்ந்டெுத்து Off என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
- இனி நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்ப்பது, ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களுக்கு தெரியாது.
ஐபோன்
- வாட்ஸ்அப் சென்று Settings என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- Account – Privacy என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Read Receipts என்ற ஆப்சனை தேர்ந்டெுத்து Off என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
இண்டர்னல் ஸ்டோரேஜில் பார்க்கலாம்
உங்களிடம் ஆண்ட்ராய்டு மொபைல் போன் இருந்தால், உங்கள் மொபைலின் ஃபைல் மேனேஜருக்கு சென்று வாட்ஸ் அப் ஃபைலை சரிபார்க்கலாம். பின்னர் இண்டர்னல் ஸ்டோரேஜ் செல்லவும். இதற்குப் பிறகு, வாட்ஸ்அப்புக்குச் செல்லவும். பின்னர் மீடியா/ஸ்டேட்டஸ் என்பதை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, இங்கே அனைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்க்க முடியும். அங்கு பார்க்க முடியவில்லை என்றால் என்றால், ஃபைல் மேனேஜருக்கு சென்று ஹிடன் ஃபைல்ஸ் என்பதை தேர்ந்தெடுக்கவும். சில ஸ்மார்ட்போன்களில், Internal Storage > Android > Media > com.whatsapp > WhatsApp > Media என்பதற்குச் சென்று இந்த விருப்பத்தைப் பெறலாம்.
இதையும் படிக்க : கீபோர்டில் இருக்கும் ஸ்பேஸ்பார் ஏன் இவ்வளவு நீளமாக இருக்கு தெரியுமா?
இன்காக்னிட்டோ முறையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்க்கலாம்
- கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த விரும்புவோர், உங்கள் கூகுள் குரோம் புரௌசரில் Incognito என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். WhatsApp உள்நுழைவதன் மூலம், உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள எந்தவொரு நபரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை உங்களால் பார்க்க முடியும்.
- இதற்காக முதலில், உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் குரோம் புரௌசரைத் திறக்க வேண்டும். பின்னர் Incognito திறக்கவும்.
இப்போது web.whatsapp.com என்ற லிங்க்கிற்கு செல்லவும். பின்னர் உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் வாட்ஸ்அப்பை இணைக்கவும். - உள்நுழைந்த பிறகு, ஸ்டேட்டஸ் ஐகானைக் கிளிக் செய்து, அப்டேட் ஆகும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் இண்டர்நெட் இணைப்பு அல்லது வைஃபையை துண்டிக்கவும். நீங்கள் இப்போது ஸ்டேட்டஸை ஆஃப் லைனில் பார்க்கலாம். நீங்கள் பார்ப்பது ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களுக்கு தெரியாது.