கண்டென்ட் கொடுத்தால் போதும்… இனி இலவசமாக வீடியோ உருவாக்கலாம் – கூகுள் விட்ஸ் அறிவிப்பு
Google Vids : கூகுள் விட்ஸ் தளம் தற்போது பயனர்களை இலவசமாக வீடியோ உருவாக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் நம் இனி நமக்கு தேவையான விஷயங்களை சொன்னால் போதும் அதுவே வீடியோ உருவாக்கி உங்களிடம் அளிக்கும். இது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கூகுளின் (Google) புதிய வீடியோ எடிட்டிங் தளமான கூகிள் விட்ஸ் (Google Vids), இப்போது அனைத்து பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த கூகுகள் விட்ஸ் கடந்த நவம்பர் 2024-ல் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் அளவுக்கு பயன்படுத்தப்பட்டது. இதில், பயனர்கள் அனைத்து எடிட்டிங் மற்றும் டெக் கருவிகளுக்கான வாய்ப்பை பெறுவார்கள். கூகுள் Veo 3 வீடியோ ஜெனரேஷன் மாடல், ஸ்டோரிபோர்டு அம்சங்கள் அல்லது ஏஐ வாய்ஸ்ஓவர் கருவியை அணுக முடியாது. ஆனால் இந்த கூகுள் விட்ஸ் தளத்தில் அந்த வசதியை பெறலாம். இந்த தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விரிவாக பார்க்கலாம்.
கூகுள் விட்ஸ் வெளியிட்டுள்ள அப்டேட்டில் தனது வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங் கருவிகளை அனைத்து பயனர்களும் இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. கூகிள் விட்ஸ் செயலி இப்போது ஒரு மில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : இனி வேலை ஈஸியா கிடைக்கும்… ஏஐ வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்
பயனர்கள் அணுகக்கூடிய கருவிகளில் ஆங்கர்-லீட் வீடியோக்கள் மற்றும் திரை பதிவுகள், கூகிள் டிரைவில் சேமிக்கப்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றுதல், புகைப்படங்கள் மற்றும் ஸ்லைடுகளை டவுன்லோடு செய்தல் மற்றும் பல்வேறு வீடியோ டெம்ப்ளேட்களில் இருந்து தேர்வு செய்தல் போன்ற கருவிகள் அடங்கும். இருப்பினும், 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Veo 3 மூலம் வீடியோ எடிட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. பயனர்கள் எட்டு வினாடிகள் வரை நீளமுள்ள வீடியோக்களை மட்டுமே இதில் எடிட் செய்ய முடியும் .
கூகுள் விட்ஸ் மூலம் வீடியோ உருவாக்குவது எப்படி?
With Veo 3’s new image to video feature, you can transform a photo into an 8-second video with sound. Just create a prompt describing how you want your image to move, then watch it come to life. Try it in Google Vids today at https://t.co/jyqDppxo4K pic.twitter.com/nnQe9vOKCR
— Google Workspace (@GoogleWorkspace) September 16, 2025
கூகிள் விட்ஸை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
- முதலில், நீங்கள் கூகிள் விட்ஸ் தளத்துக்கு செல்ல வேண்டும். உங்கள் புரௌசரில் https://workspace.google.com/intl/en_in/products/vids/ என்ற URL ஓபன் செய்யவும்.
- அங்கு சென்றதும், உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- பின்னர் கூகுள் ஸ்லைடுகளைப் போன்ற ஒரு இன்டர்ஃபேஸிற்கு செல்லும்.
- இதில் நீங்கள் விரும்பும் ஸ்கிரிப்டை பதிவேற்ற, அல்லது எழுத அனுமதி அளிக்கும்.
- புகைப்படங்கள் மற்றும் டிவைஸில் இருந்து பல மீடியா கோப்புகளைத் தேர்ந்தெடுத்து சேர்க்க அனுமதிக்கிறது.
- அடுத்து, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ்டில் இருந்து ஸ்டாக் படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
- இறுதியாக, டெம்ப்ளேட்கள் ஒரு வீடியோ வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்து அதை உருவாக்க உங்களுக்கு விருப்பத்தை வழங்குகின்றன.
இதையும் படிக்க : இனி ஹிந்தி, தெலுங்கு வீடியோக்களை நேரடியாக தமிழில் பார்க்கலாம் – யூடியூபில் வந்தாச்சு புதிய வசதி
இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான வகையில் வீடியோ உருவாக்க முடியும். அல்லது வீடியோ எடிட் செய்ய முடியும் அதுவும் இலவசமாக செய்ய முடியும் என்பது இதன் கூடுல் ஸ்பெஷல். இனி அனைவராலும் வீடியோ எடிட் செய்ய முடியும்.