Flipkart Black : இலவச யூடியூப் பிரீமியம் முதல் கேஷ்பேக் வரை.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது பிளிப்கார்ட் பிளாக்!

Flipkart Black Premium Plan | இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்டை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பல அசத்தல் அம்சங்களுடன் கூடிய பிளிப்கார்ட் பிளாக் திட்டத்தை அந்த நிறுவனம் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

Flipkart Black : இலவச யூடியூப் பிரீமியம் முதல் கேஷ்பேக் வரை.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது பிளிப்கார்ட் பிளாக்!

பிளிப்கார்ட் பிளாக்

Updated On: 

26 Aug 2025 13:56 PM

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் தனது பிரீமியம் திட்டமான பிளிப்கார்ட் பிளாக்கை (Flipkart Black) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரீமியம் திட்டம் பிளிப்கார்ட் தொடர்பான சேவைகளை வழங்குவது மட்டுமன்றி, பல மூன்றாம் தரப்பு செயலிகளின் சேவைகளையும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த பிளிப்கார்ட் பிளாக் திட்டம் என்றால் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிளாக் திட்டத்தை அறிமுகம் செய்த பிளிப்கார்ட்

உலகில் உள்ள மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களில் ஒன்றாக பிளிப்கார்ட் நிறுவனம் உள்ளது. உலக அளவில் அதிக மக்களால் பிளிப்கார்ட் சேவைகள் பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியாவிலும் பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இந்திய பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிளிப்கார்ட் அவ்வப்போது பல அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்கும். அந்த வகையில் தற்போது இந்தியர்களுக்கான பிரத்யேக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : புதிய ஜிமெயில் ஏஐ மோசடி: 180 கோடி கணக்குகளின் பாஸ்வேர்டுகள் திருடப்படும் அபாயம் – எப்படி தவிர்ப்பது?

பிளிப்கார்ட் பிளாக் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிளிப்கார்ட் பிளாக் திட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

  • இந்த சிறப்பு திட்டத்தில் பயனர்கள் ஒரு ஆண்டு காலம் வரை யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் (YouTube Premium Subscription) பெறுவார்கள்.
  • இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் பிளிப்கார்ட் பிளாக் டீல்ஸ் என்ற சலுகையின் மூலம் அசத்தல் தள்ளுபடிகளை பெறுவார்கள். அதாவது மின்சாதன பொருட்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் கூறியுள்ளது.
  • பயணங்களை ரத்து மற்றும்  மறு அட்டவணை செய்யும் அம்சங்களை பெற வழிவகை செய்கிறது.
  • அதுமட்டுமன்றி இந்த பிளிப்கார்ட் பிளாக் மூலம் பயனர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைகளுக்கும் 5 சதவீதம் சூப்பர் காயின்கள் வழங்கப்படும். ரூ.100-க்கு மேற்கொள்ளப்படும் ஷாப்பிங்குகளுக்கு இது பொருந்தும்.
  • 15 சதவீதம் வரை வங்கி சலுகைகளும் இதில் கிடைக்கிறது.
  • கஸ்டமர் சப்போர்டில் முன்னிரிமை வழங்கப்படும்.

இதையும் படிங்க : இந்தியர்களுக்கு பிரத்யேகமான சாட்ஜிபிடி கோ.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம்!

இவ்வளவு பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த பிளிப்கார்ட் பிளாக் திட்டம் ரூ.1,499-க்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு அந்த நிறுவனம் Early Bird Discount வழங்குகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தை வெறும் ரூ.990-க்கு வழங்கப்படுகிறது. 2025, ஆகஸ்ட் மாதம் வரை இந்த சலுகை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.