பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்.. இந்த 53 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. லிஸ்ட் இதோ!

Flipkart Big Billion Days Sale 2025 | பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் நாளை (செப்டம்பர் 23, 2025) தொடங்க உள்ள நிலையில், அதில் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள 53 ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்.. இந்த 53 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. லிஸ்ட் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Sep 2025 14:40 PM

 IST

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் தனது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலை (Flipkart Big Billion Days Sale) அறிவித்துள்ளது. அட்டகாசமான அம்சங்கள், சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் உள்ள  இந்த சேல் நாளை (செப்டம்பர் 23, 2025) தொடங்க உள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாத பொருட்கள் என பல பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் , பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள 53 ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் – 53 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

ஆப்பிள்

  • ஐபோன் 16 (iPhone 16) – ரூ.79,900-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.51,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) – ரூ.1,19,900-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.69,900-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) – ரூ.1,44,900-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.89,900-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சாம்சங்

  • சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) – ரூ.74,999-க்கான் ஐந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ (Samsung Galaxy S24 FE) – ரூ.59,999-க்கான் ஐந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • சாம்சங் கேலக்ஸி ஏ35 (Samsung Galaxy A35) – ரூ.33,999-க்கான் ஐந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • சாம்சங் கேலக்ஸி எஃப்36 (Samsung Galaxy F36) – ரூ.20,999-க்கான் ஐந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • சாம்சங் கேலக்ஸி எஃப்06 (Samsung Galaxy F06) – ரூ.12,499-க்கான் ஐந்த ஸ்மார்ட்போன் ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • சாம்சங் கேலக்ஸி எஃப்05 (Samsung Galaxy F05) – ரூ.9,999-க்கான் ஐந்த ஸ்மார்ட்போன் ரூ.6,249-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 10 நிமிடங்களில் Blinkit-ல் டெலிவரி செய்யப்படும் ஐபோன் 17.. அதுவும் அசத்தல் சலுகைகளுடன்!

கூகுள் பிக்சல்

  • கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 9 Pro XL) – ரூ.1,24,999-க்கான் இந்த ஸ்மார்ட்போன் ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 9 Pro Fold) – ரூ.1,72,999-க்கான் இந்த ஸ்மார்ட்போன் ரூ.99,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) – ரூ.79,999-க்கான் இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நத்திங்

  • நத்திங் போன் 3 (Nothing Phone 3) – ரூ.84,999-க்கான் இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) – ரூ.27,999-க்கான் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro)  – ரூ.32,999-க்கான் இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • நத்திங் சிஎம்எஃப் 2 ப்ரோ (Nothing CMF 2 Pro) – ரூ.22,999-க்கான் இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : எக்கச்சக்க சலுகைகளுடன் தீபாவளி சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள்!

ஓப்போ

  • ஓப்போ கே13 டர்போ ப்ரோ (Oppo K13 Turbo Pro) – ரூ.41,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ஒப்போ கே13 டர்போ (Oppo K13 Turbo) – ரூ.35,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ஓப்போ கே13 (Oppo K13) – ரூ.19,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (Oppo K13x 5G) – ரூ.16,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,499-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விவோ

  • விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) – ரூ.40,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • விவோ டி4 ப்ரோ (Vivo T4 Pro) – ரூ.40,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • விவோ டி4 (Vivo T4) – ரூ.25,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • விவோ டி4ஆர் (Vivo T4 R)  – ரூ.24,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • விவோ டி4எக்ஸ் (Vivo T4x) – ரூ.17,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,499-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • விவோ டி4 லைட் (Vivo T4 Lite)  – ரூ.12,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Meta Ray Ban ஜென் 2 ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்.. அட இத்தனை அசத்தல் அம்சங்களா?

போக்கோ

  • போக்கோ எஃப் 7 (Poco F7) – ரூ.35,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • போக்கோ எக்ஸ்7 ப்ரோ (Poco X7 Pro) – ரூ.24,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • போக்கோ எம் பிளஸ் (Poco M Plus) – ரூ.15,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • போக்கோ எம் 7 (Poco M 7) – ரூ.17,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • போக்கோ சி75 (Poco C75) – ரூ.10,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,399-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • போக்கோ சி71 (Poco C71) – ரூ.8,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,299-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா

  • மோட்டோரோலா ரேசர் 60 (Motorola Razr 60) – ரூ.54,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) – ரூ.39,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) – ரூ.40,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) – ரூ.25,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • மோட்டோரோலா எட்ஜ் ஜி86 பவர் (Motorola Edge G86 Power) -ரூ.19,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • மோட்டோரோலா எட்ஜ் ஜி96 பவர் (Motorola Edge G96 Power) -ரூ.19,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • மோட்டோரோலா எட்ஜ் ஜி44 பவர் (Motorola Edge G45 Power) -ரூ.19,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • மோட்டோரோலா ஜி35 (Motorola G35) – ரூ.12,499-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரியல்மி

  • ரியல்மி பி3எக்ஸ் (Realme P3x) – ரூ.16,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ரியல்மி பி3 அல்ட்ரா (Realme P3 Ultra) – ரூ.33,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ரியல்மி பி3 லைட் (Realme P3 Lite) – ரூ.12,499-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ரியல்மி பி4 ப்ரோ (Realme P4 Pro) – ரூ.28,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ரியல்மி பி4 (Realme P4) – ரூ.22,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • ரியல்மி சி61 (Realme C61) – ரூ.9,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,249-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்பினிக்ஸ்

  • இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ (Infinix GT 30 Pro) – ரூ.27,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • இன்பினிக்ஸ் ஜிடி 30 (Infinix GT 30) – ரூ.19,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • இன்பினிக்ஸ் நோட் 50எஸ் (Infinix Note 50s) – ரூ.24,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • இன்பினிக்ஸ் ஹாட் 60ஐ (Infinix Hot 60i) – ரூ.24,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டெக்னோ

  • டெக்னோ போவா 7 ப்ரோ (Tecno Pova 7 Pro) – ரூ.24,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,499-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • டெக்னோ போவா 7 (Tecno Pova 7 ) – ரூ.17,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,249-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரெட்மி

  • ரெட்மி நோட் 14 எஸ்இ (Redmi Note 14 Se) – ரூ.18,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,449-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.