மெட்டா ஏஐ டிரான்ஸ்லேஷன் வசதி – இனி ஒரே வீடியோவை அனைத்து மொழிகளிலும் பகிரலாம்!
Meta AI Translation : மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு மொழியில் உருவாக்கப்படும் வீடியோ மற்ற மொழிகளில் கிடைக்கும் பார்க்கும் வகையில் மெட்டா ஏஐ டிரான்ஸ்லேஷன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) தாக்கம் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மெட்டா (Meta) நிறுவனம் தனது சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ்அப்பில் மெட்டா ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. அந்த வகையில் தற்போது மெட்டா ஏஐ டிரான்ஸ்லேஷன் என்ற புதிய கருவியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கண்டென்ட் கிரியேட்டர்ஸ் தங்கள் விடியோக்களை பல மொழிகளில் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக தனியாக வேறு மொழிகளில் டப் செய்ய வேண்டியதில்லை. அதனை இந்த மெட்டா ஏஐ டிரான்ஸ்லேஷன் சில நொடிகளில் செய்யும் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆரம்பத்தில் கிடைக்கும் மொழிகள்
முதற்கட்டமாக தற்போது ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மற்றும் ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலம் என இரண்டு மொழிகளுக்கிடையே மட்டுமே குரல் மொழி பெயர்ப்பு செய்யும் வசதி உள்ளது. விரைவில் பல புதிய மொழிகளிலும் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ தானாகவே வேறு மொழிகளுக்கு மாற்றப்படுவதோடு, லிப் சிங்க்கும் அதற்கு ஏற்ப மாறும். உதாரணமாக ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மாற்றப்படும்போது, கிரியேட்டர் நேரடியாக ஸ்பானிஷில் பேசுவது போலவே உதட்டசைவு இருக்கும். இதன் ஒரு கண்டென்ட் உலக அளவில் சென்றடையும்.
இதையும் படிக்க : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!
எப்படி செயல்படுகிறது?
- இந்த ஆப்சனை பயன்படுத்த விரும்புகிறவர்கள், வீடியோ பதிவேற்றிய பிறகு, Translate Your Voice With Meta AI என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின்னர் மொழியைத் தேர்ந்தெடுத்து லிப் சிங்க் அமைப்புகளை நீங்களே அட்ஜெஸ்ட் செய்யலாம்.
- மொழிபெயர்ப்புகளை வெளியிடுவதற்கு முன் பரிசீலிக்க முடியும்.
- இதனயைடுத்து Professional Dashboard மூலமும் இறுதியான மாற்றங்ளை மேற்கொள்ளலாம்.
இதையும் படிக்க : இன்ஸ்டாவில் லைவ் ஸ்டிரீமிங் செய்யும் நபரா நீங்கள்.. இந்த புதிய விதியை தெரிந்துக்கொள்ளுங்கள்!
இதன் மூலம் தங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களின் வீடியோக்களை தங்கள் சொந்த மொழியிலேயே பார்க்க முடியும். லிப் சிங் மூலம் மாற்றப்படுவதால், நேரடியாக சொந்த மொழியில் உருவாக்கப்பட்ட வீடியோவைப் பார்த்த உணர்வு கிடைக்கும். மேலும் ஃபேஸ்புக் பேஜ்ஜில் ஒரே ரீல் ரீல் வீடியோவுக்கு 20க்கு மேற்பட்ட சப் செய்யப்பட்ட குரல் பதிவுகளை உருவாக்கலாம். இது உங்கள் வீடியோவுக்கான வியூஸ் பல மடங்கு அதிகரிக்கும். ரீச் உலக அளவில் கிடைக்கும்.
இந்த புதிய வசதி உலக அளவில் உங்கள் கண்டென்ட் சென்றடையும் என்றாலும், கண்டென்ட்கள் அதிகரிக்கும் என்பதால், மக்கள் சமூக வலைதளங்களில் செலவிடும் நேரமும் அதிகரிக்கும். இதனால் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படலாம். குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் ஆகியவை மதுபானம், மற்றும் பிற போதைப் பொருள் பயன்படுத்தினால் என்ன தாக்கம் ஏற்படுமோ அந்த தாக்கம் இதிலும் ஏற்படும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.