ChatGPT : சாட்ஜிபிடியில் இனி டீனேஜர்களுக்கு வரும் பெற்றோரின் கட்டுப்பாடு.. ஓபன் ஏஐ முக்கிய முடிவு!

ChatGPT Parental Control | ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியை ஏராளமான டீனேஜர்கள் பயன்படுத்தும் நிலையில், அதன் மூலம் அவர்கள் சில ஆபத்தான முடிவுகளை எடுக்கின்றனர். இந்த நிலையில், டீனேஜர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர் கண்காணிப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ChatGPT : சாட்ஜிபிடியில் இனி டீனேஜர்களுக்கு வரும் பெற்றோரின் கட்டுப்பாடு.. ஓபன் ஏஐ முக்கிய முடிவு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Aug 2025 19:34 PM

தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் செயற்கை நுண்ணறிவின் (AI – Artificial Intelligence) சாட்ஜிப்டி (ChatGPT) அம்சத்தை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு உலக மக்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது தான் ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி. இந்த சாட்ஜிபிடிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ள நிலையில், அதில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவர உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது சாட்ஜிபிடியை சிறுவர்கள் முதல் பலரும் பயன்படுத்தும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோர்களின் கண்காணிப்பு இணைக்கப்பட உள்ளது.

உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் சாட்ஜிபிடி

மனிதர்களின் கேள்விக்கு நொடி பொழுதில் பதில் அளிக்கும் ஒரு அசத்தல் அம்சமாக சாட்ஜிபிடி உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து சாட்ஜிபிடியிடம் கேட்கின்றனர். கேள்வி கேட்பது, சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதை தாண்டி பலரும் சாட்ஜிபிடியை தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை அதில் பதிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில், தொடர்ந்து சாட்ஜிபிடியை பயன்படுத்திய நபர்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இதையும் படிங்க : இந்தியர்களுக்கு பிரத்யேகமான சாட்ஜிபிடி கோ.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம்!

சாட்ஜிபிடியால் உயிரிழந்த 16 வயது சிறுவன்

சான் பிரான்சிஸ்கோவில் 16 வயது சிறுவன் ஒருவர் சாட்ஜிபிடி பயன்படுத்தியால் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெற்றோர் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது புகார் அளித்துள்ளனர். சாட்ஜிபிடி தனது மகனின் தற்கொலை எண்ணத்தை தூண்டியதாகவும், தற்கொலை செய்துக்கொள்வதற்கான வழிகளை வழங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சிறுவனுக்கு சாட்ஜிபிடி தற்கொலை கடிதத்தையும் தயார் செய்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : Smart Ring : ஸ்மார்ட் வாட்ச் போலவே அறிமுகமான ஸ்மார்ட் ரிங்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

சாட்ஜிபிடியில் வரும் பெற்றோரின் கட்டுப்பாடு

சாட்ஜிபிடியை பயன்படுத்தும் சிறுவர்கள் பல விதமான சிக்கல்களை சந்திக்கும் நிலையில், அதில் பெற்றோரின் கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளதாக சாட்ஜிபிடி தெரிவித்துள்ளது. டீனேஜர்களை பாதுகாக்கும் வகையில் பெற்றோர் கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளது. அதாவது, இந்த அம்சத்தின் மூலம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சாட்ஜிபிடியை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதனை கண்காணிக்க முடியும். அதுமட்டுமன்றி அவசர தகவல் தொடர்புக்காக பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மொபைல் எண்ணை வழங்கும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.