Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ChatGPT : சாட்ஜிபிடி உதவியுடன் ரூ.10.3 லட்சம் கடனை அடைத்த பெண்.. வியக்கும் நெட்டிசன்கள்!

Woman Repaid Loan With ChatGPT | செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஒரு முக்கிய அம்சமான சாட்ஜிபிடை உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அவர்கள் அதில் கேட்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் சாட்ஜிபிடி உதவியுடன் தனது ரூ.10.3 லட்சம் கடனை அடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

ChatGPT : சாட்ஜிபிடி உதவியுடன் ரூ.10.3 லட்சம் கடனை அடைத்த பெண்.. வியக்கும் நெட்டிசன்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Jul 2025 13:29 PM

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அம்சம் அனைத்து பொதுமக்களும் பயன்பாட்டிற்கு கிடைக்கும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் சாட்ஜிபிடியை (ChatGPT) அதிகம் பயன்படுத்துகின்றனர். சாட்ஜிபிடியிடம் அனைத்து விதமான கேள்விகளை கேட்பது, தனிப்பட்ட தகவல்களை பகிர்வது மிகவும் ஆபத்தானது என வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில், சாட்ஜிபிடி மூலம் சில அசாத்தியமான விஷயங்களை செய்ததாக பொதுமக்கள் தங்கள அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சாட்ஜிபிடி மூலம் தனது ரூ.10 லட்சம் கடனை திருப்பி செலுத்தியதாக பெண் ஒருவர் கூறியுள்ளார்.

சாட்ஜிபிடி மூலம் ரூ. 10 லட்சம் கடனை அடைத்த பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கிரெடிட் கார்டு கடனை (Credit Card Loan) குறைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். அந்த பெண்ணின் நிதி நிலமை மிகவும் மோசமாக இருந்த நிலையில், என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்த அந்த பெண் சாட்ஜிபிடியின் உதவியை நாடியுள்ளார். இந்த நிலையில், சாட்ஜிபிடி வழங்கிய ஆலோசனைகளின் படி தனது ரூ.10 லட்சம் கடனை மிக சுலபமாக அடைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

சாட்ஜிப்டி உதவியுடன் கடனை அடைத்தது எப்படி?

அமெரிக்காவில் வசித்து வரும் ஜெனிஃபர் ஆலன் என்ற அந்த பெண், ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர் ஆவார். தான் நிதி நெருக்கடியில் இருந்த போது சாட்ஜிபிடி உதவியுடன் தான் எப்படி கடனை அடைத்தார் என்பது குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், நான் போதுமான அளவு பணம் சம்பாதிக்காமல் இல்லை. ஆனால், நிதி கல்வி அறிவு எனக்கு ஒருபோது கற்பிக்கப்படவில்லை. இதுதான் என்னுடைய நிதி சிக்கலுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

எனக்கு நல்ல வருமானம் இருந்தபோதும், எனது கிரெடிட் கார்டு கடன் 23,000 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துவிட்டது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.19.6 லட்சம் ஆகும். இந்த நிலையில், இதில் இருந்து வெளியேவர சாட்ஜிபிடியின் உதவியை நாடினேன். அதில் எனக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செலவுகளை திட்டமிட்டேன். அதன்படி 30 நாட்கள் சாட்ஜிபிடியின் நிதி சவாலை எதிர்கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

சாட்ஜிபிடியின் இந்த அறிவுரைகளின் அடிப்படையில் நடந்ததால் ஜெனிஃபர் தனது பரிவர்த்தனை கணக்கில் மட்டும் ரூ.8.5 லட்சம் இருந்ததாக கூறியுள்ளார். மேலும், சாட்ஜிபிடியின் ஆலோசனையின் படி, உணவு திட்டமிடலை மேற்கொண்ட அவருக்கு மாதம் ரூ.50,000 வரை மளிகை செலவு குறைந்துள்ளது. இந்த நிலையில், சாட்ஜிபிடியின் அறிவுரையின் படி தான் மேற்கொண்ட 30 நாட்கள் நிதி சவாலில் மட்டும் அவர் 12,078 கிரெடி கார்டு கடனை அடைத்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.10.3 லட்சம் ஆகும்.

தனக்கு இருந்த கிரெடிட் கார்டி கடனில் பெரும் பங்கை அவர் திருப்பி செலுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள தொகையை செலுத்த அடுத்த 30 நாட்கள் நிதி சவாலை கையில் எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.