Year Ender 2025 : 2025-ல் அறிமுகமான அட்டகாசமான 4 Foldable Smartphones.. சிறப்பு அம்சங்கள் என்ன?
Best Foldable Smartphones 2025 | 2025-ல் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த நிலையில், 2025-ல் அறிமுகமான 4 மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்கள், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்கள்
2025 முடிவடைய இன்னும் ஒருசில நாட்களவே உள்ள நிலையில், விரைவில் 2026 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் பல அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிலும் பல முன்னணி நிறுவனங்களின் தங்களின் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் அறிமுகம் செய்த சில மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்கள் (Foldable Smartphones Of 2025) மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025-ல் அறிமுகமான மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்கள்
2025-ல் சாம்சங் (Samsung), விவோ (Vivo), கூகுள் (Google)ஆகிய நிறுவனங்கள் தங்களின் மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.
சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 7
2025-ல் இந்தியாவில் அறிமுகமான அட்டகாசமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றுதான் சாம்சங் கேலக்ஸி Z Fold 7 (Samsung Galaxy Z Fold 7). இந்த ஸ்மார்ட்போனில் எடையை குறைப்பதற்காக டைட்டானியம் பிளாக் பிளேட் (Titanium Black Plate) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனின் எடை வெறும் 215 கிராமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8.0 உள்பக்க டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 6.5 இன்ச் கவர் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசசரை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ள நிலையில், இதில் அட்டகாசமான ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 4,400 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.1,74,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5
விவோ நிறுவனம் ஜூலை மாதத்தில் தனது விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனை (Vivo X Fold 5 Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6,000 mAh சிலிக்கான் – கார்பன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்களில் அதிக பேட்டரி திறன் கொண்டதாக இது உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 80 வாட்ஸ் வயர்டு மற்றும் 40 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று 50 எம்பி சென்சார்ஸ் கொடுகப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் சிப்செட் அம்சத்தையும், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.10000 பட்ஜெட்டுக்குள் சூப்பரான கேமரா குவாலிட்டி.. 2025 கலக்கிய செல்போன்கள்!
கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட்
கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனை (Google Pixel 10 Pro Fold Smartphone) அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் மற்றும் ஜெமினி நேனோ அம்சங்களை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 8 இன்ச் உள்பக்க OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 6.3 இன்ச் வெளிபக்க டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு கூகுள் நிறுவனம் 7 ஆண்டுகள் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்டுகளை வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் தளத்தில் ரூ.1,72,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Year Ender 2025 : 2025-ல் வாட்ஸ்அப்பில் அறிமுகமான அட்டகாசமான அம்சங்கள்!
சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் 7
சாம்சங் நிறுவனம் 2025-ல் அறிமுகம் செய்த ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7). இந்த ஸ்மார்ட்போனில் DeX சப்போர்ட் உள்ள நிலையில், கூடுதல் டிஸ்பிளேவுக்காக ஸ்மார்ட்போன்களில் இதனை இணைத்துக்கொள்ளலாம். இதில் அனைத்து செயலிகளையும் பயன்படுத்தும் விதமாக 4.1 இன்ச் Flex Windows கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள 6.9 இன்ச் உள்பக்க ஸ்கிரீன் தினசரி பயன்பாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் Exynos 2500 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4,300 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இது நீடித்து உழைக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.1,09,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இந்த நான்கு ஸ்மார்ட்போன்களும் 2025-ல் அறிமுகமான, அசத்தல் அம்சங்களை கொண்ட மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.