Apple iPhone 17 Air : அதிரடியாக களமிறங்க உள்ள ஆப்பிள் ஐபோன் 17 ஏர்.. அட இத்தனை சிறப்பு அம்சங்களா?

Apple iPhone 17 Air Smartphone | ஆப்பிள் நிறுவனத்தில் ஆப்பிள் ஐபோன் 17 ஏர் நாளை (செப்டம்பர் 09, 2025) அறிமுகமாக உள்ளது. அதனை அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் ஒருசில வெளியாகியுள்ளன. அது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

Apple iPhone 17 Air : அதிரடியாக களமிறங்க உள்ள ஆப்பிள் ஐபோன் 17 ஏர்.. அட இத்தனை சிறப்பு அம்சங்களா?

ஐபோன் 17 ஏர்

Updated On: 

08 Sep 2025 17:59 PM

 IST

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான படைப்பான ஆப்பிள் ஐபோன் 17 ஏர் (Apple iPhone 17 Air) நாளை (செப்டம்பர் 09, 2025) இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து அறிவித்தது முதலே அதன் மீதான எதிர்ப்பார்புகள் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை முன்னிட்டு சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 17 ஏர் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாளை அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன்

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும்  என்பதற்காக ஒவ்வொரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்போது ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஆப்பிள் 17 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஐபோன்களை போல் இருக்காது என்றும் இது முற்றிலுமாக வித்தியாசமான டிசைன் மற்றும் அம்சங்களை கோண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை சிறப்பு அம்சங்களா.. வெறும் ரூ.6,099-க்கு அறிமுகமான லாவா யுவா ஸ்மார்ட் 2!

டிஸ்பிளே மற்றும் டிசைன்

இந்த ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனை மிகவும் மெல்லிய தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்காக அதில் 5.5 mm டிஸ்பிளே கொடுக்கபட உள்ளதாக கூறப்பட்டது. அதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 16 ஸ்மார்ட்போனில் 7.8 mm டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதனை விட 2 mm சிறிய டிஸ்பிளே கொண்டதாக இந்த ஆப்பிள் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் ஆப்பிள் 17 ஏர் 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெறும் 145 கிராம் எடை கொண்டாதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Realem 15 T : 7,000 mAh பேட்டரி.. 128 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 டி!

கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிளின் புதிய ஏ19 சிப்செட் அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுதவிர நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வகையில் Cooling Technology-ம் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2,800 mAh பேட்டரி அம்சம் இருக்கும் என்றும், 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 24 மெகா பிக்சல் சென்சார் மற்றும் ஐபோன் 16 செல்ஃபி கேமராவில் இருப்பதை போல இரண்டு மடங்கு Resolution அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.