Amazon Great Freedom Sale 2025: சாம்சங், போட்… பிராண்டட் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 70% வரை தள்ளுபடி!

Amazon Sale Highlights: அமேசான் ஃபிரீடம் சேல் விற்பனை நடைபெற்று வருகிறது. சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ் உள்ளிட்ட பிராண்ட்டட் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் ஸ்மார்ட் வாட்ச் வாங்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Amazon Great Freedom Sale 2025: சாம்சங், போட்... பிராண்டட் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 70% வரை தள்ளுபடி!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Aug 2025 19:02 PM

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Freedom Festival Sale 2025) கடந்த ஜூலை 31, 2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் பல முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் மிகப் பெரிய தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை வருகிற ஆகஸ்ட் 6, 2025 வரை மட்டுமே நடைபெறவுள்ளது.  இந்த விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 70 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.  சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ் (OnePlus), போட், அமேஸ்ஃபிட், நாய்ஸ் உள்ளிட்ட பிரபல பிராண்ட்களின் ஸ்மார்ட்வாட்ச்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்பதால் இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.  இந்த ஆண்டு விற்பனையின் சிறப்பு அம்சமாக, வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகளுடன் வங்கிகள் வழங்கும் சலுகைகள்,   இஎம்ஐ வாய்ப்புகள், கேஷ்பேக் சலுகைகள் ஆகியவற்றையும் பெறுகிறார்கள்.

தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள்

1. Samsung Galaxy Watch6 Classic LT

சாம்சங்கின் இந்த கேலக்ஸி வாட்ச்6 51 சதவிகிதம் தள்ளுபடியுடன் ரூ.24,996க்கு விற்கப்படுகிறது. இதில் அதிநவீன இசிஜி, இரத்த அழுத்த பரிசோதனை வசதி, எடிஇ வசதி, உடற்பயிற்சி கண்காணிப்பு, சாம்சங் பே ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.

2. OnePlus Watch 2

இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2, 47 சதவிகிதம் தள்ளுபடியுடன் ரூ.14,749க்கு கிடைக்கிறது. இதில் Snapdragon W5 chip, Dual Frequency GPS, 100+ ஸ்போர்ட்ஸ் மோடுகள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளுடன் வருகிறது.

இதையும் படிக்க : பிளிக்பார்ட் ஃபிரீடம் சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

3. Amazfit Active 2 Square

இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் வாட்ச் 50 சதவிகிதம் தள்ளுபடியுடன் ரூ.12,999க்கு விற்கப்படுகிறது. இந்த வாட்ச் 2000 nits AMOLED திரை, Zepp OS, இலவச மேப் வசதி மற்றும் துல்லியமான ஹெல்த் டேட்டாவுடன் கிடைக்கிறது.  இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு பொருத்தமானது.

4. boAt Storm Infinity

இந்த போட் ஸ்டோர்ம் இன்ஃபினிட்டி வாட்ச் 81 சதவிகிதம் தள்ளுபடியுன் ரூ.1,149க்கு கிடைக்கிறது.  550mAh பேட்டரி, புளூடூத் காலிங்,  15 நாட்கள் பேட்டரி மற்றும் Emergency SOS ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.

இதையும் படிக்க : முன்னணி பிராண்டு இயர்போன்களுக்கு 75% வரை தள்ளுபடி.. உடனே செக் பண்ணுங்க!

5. Noise Twist Go

நாய்ஸ் டிவிஸ்ட் கோ வாட்சானது 68 சதவிகிதம் தள்ளுபடியுடன் ரூ. 1,599 விலையில் கிடைக்கிறது. இதில் புளுடூத் காலிங், SpO2, ஸ்லீப் மானிட்டர், 100+ ஸ்போர்ட்ஸ் மோடுகள் போன்ற அம்சங்களுடன் கிடைக்கிறது.

விற்பனையின் சிறப்பம்சங்கள்

  • பல முன்னணி பிராண்டுகளை குறைந்த விளலையில் வாங்க முடியும்.
  • எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிகளின் கார்டுகளுக்கு சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கும்.
  • இஎம்ஐ மற்றும் கேஷ்பேக் சலுகைகள்
  • ஒரு வருட வாரண்டியுடன் இலவச டெலிவரி