மாமனார் வீட்டில் விருந்து.. இறால் சாப்பிட்ட புதுமாப்பிள்ளை பலி.. திருமணமான 17 நாளில் சோகம்!

Villupuram Youth Dies : விழுப்புரம் மாவட்டத்தில் இறால் சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற அவர், இறால் உணவை சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாமனார் வீட்டில் விருந்து.. இறால் சாப்பிட்ட புதுமாப்பிள்ளை பலி.. திருமணமான 17 நாளில் சோகம்!

மாதிரிப்படம்

Updated On: 

30 Sep 2025 07:55 AM

 IST

விழுப்புரம், செப்டம்பர் 30 :  விழுப்புரத்தில் இறால் சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழந்துள்ளார். மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற அவர், இறால் சாப்பிட்ட பிறகு உயிரிழந்தார். திருமணமான 17 நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றயை காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக, கடல் சார்ந்த உணவுகளை பக்குவமாக சமைத்து சாப்பிட வேண்டும். இல்லையெனில் சில அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறும். இந்த நிலையில் தான், விழுப்புரத்தில் இறால் சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் சஞ்சீவ் ராஜ் (28). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்டு ரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் 2025 செப்டம்பர் 11ஆம் தேதி விழுப்புரத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 28ஆம் தேதி கோலினூர் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சஞ்சீவ்ராஜ் விருந்துக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு இறால் உணவு பரிமாறப்பட்டதாக தெரிகிறது. அதனை சாப்பிட்ட சஞ்சீவ் ராஜ்க்கு சில நிமிடங்களிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டது. வாந்தி, மயக்கம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

Also Read : கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

இறால் சாப்பிட்ட புதுமாப்பிள்ளை பலி

இதனால், அவரை சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.  அங்கு தீவிர அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2025 செப்டம்பர் 29ஆம் தேதியான நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளனர். இதகுறித்து சஞ்சீவ்ராஜின் தாய் கல்யாணி வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெட்டுப்போன இறாலை சாப்பிட்டதால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமணமான 11 நாளிலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : ‘செந்தில் பாலாஜி தான் காரணம்’ விஜய் தொண்டர் எடுத்த விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்!

மற்றொரு சம்பவம்

சமீபத்தில் சென்னை கடற்கரையில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சிறுமி, தனது பெற்றோருடன் கடற்கரைக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர், கடற்கரையில் உள்ள கடைகளில் மீன்கள், சிக்கன் பிரைடு ரைஸ் உள்ளிட்டவை சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த அவருக்கு காய்ச்சல், வாந்தி ஏற்பட்டுள்ளது. மறுநாள் சிறுமிக்கு வாய், மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.