காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் ஷாக்

Tirupur Crime News : திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் மேம்பாலத்தின் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் ஷாக்

உயிரிழந்த இளைஞர்

Updated On: 

27 Sep 2025 08:21 AM

 IST

திருப்பூர், செப்டம்பர் 27 : திருப்பூர் மாவட்டத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் யோகேஷ். இவருக்கு வயது 19. இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக தனது வீட்டிற்கு அருகே வசித்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கு முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் காதலித்து வந்தது இருவீட்டாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், யோகேஷ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால், ஊத்துக்குளி சாலையில் உள்ள மேம்பால பகுதிக்கு சென்றார்.

திருப்பூரில் இளைஞர் தற்கொலை

அங்கு பாலத்தின் மீது ஏறி திடீரென கீழே குதித்தார். சுமார் 30 அடி உயரத்தில் இருந்து யோகேஷ் கீழே குதித்துள்ளார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் யோகேஷை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read : டாஸ்மாக்கில் பாட்டில் திரும்ப பெறும் திட்டம்.. சிக்கலில் தமிழக அரசு!

மற்றொரு சம்பவம்

அண்மைக் காலங்களில் இளைஙர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காதல் விவகாரத்தில் இளைஞர்கள் பலரும் விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். சமீபத்தில்கூட, சென்னையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராபி மற்றும் திரிஷா ஆகிய இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Also Read : குரூப் 2 தேர்வுக்கு கட்டுப்பாடு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் ஹோட்டல் அறையில் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். இதில், கடுப்பான இளைஞர் ராபி அறையில் இருந்து வெளியேறினார். இதனால், திரிஷா அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த ராபி, அவருக்கு வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்.