பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய இளம் பெண்.. திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்!
Woman Thrown New Born In Hospital Dustbin | தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இளம் பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்ற நிலையில், அந்த குழந்தையை மருத்துவமனையின் கழிவறையில் உள்ள குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, ஜனவரி 04 : தூத்துக்குடி (Tuticorin) மாவட்டம், திருச்செந்தூர் (Tiruchendur) அமலிநகரை சேர்ந்தவர் இளம் பெண். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பெற்ற நிலையில், குழந்தை பெற்ற ஒருசில மணி நேரங்களிலேயே அந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட நிலையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு
அந்த இளம் பெண்ணுக்கு இளைஞர் ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அவருடன் நெருங்கி பழகியதன் காரணமாக அந்த இளம் பெண் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இளம் பெண் மற்றும் அவர் திருமணம் செய்துக்கொள்ள இருந்த அந்த இளைஞர் இருவரும் இணைந்து தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்து அடுத்த ஒருசில நிமிடங்களிலேயே யாருக்கும் தெரியாமல் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : புதுச்சேரியில் புத்தாண்டு மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா…தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் இளம் பெண் மற்றும் அவர் திருமணம் செய்துக்கொள்ள உள்ள இளைஞர் ஆகியோரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : இனி 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் போகலாம் – பொங்கலுக்கு வருது வந்தே பாரத் ரயில் – எந்தெந்த ஸ்டேஷனில் நிற்கும்?
பிறந்து ஒருசில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாய் மற்றும் தந்தை மருத்துவம்னையின் குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.