Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளம்பெண்ணுக்கு மிரட்டல்.. ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது.. திடுக் பின்னணி!!

Young woman threatened in chennai: சைபர் குற்றப்பரிவு தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து, மார்த்தாண்டத்தில் இருந்த சைஜூவை கண்காணித்து நேரில் சென்று கைது செய்தனர். கைதான சைஜூ இன்ஸ்டாகிராமில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு ஆயிரக்கணக்கான பாலோவர்ஸை கொண்டிருந்த பிரபலம் என்பது தெரியவந்தது.

இளம்பெண்ணுக்கு மிரட்டல்.. ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது.. திடுக் பின்னணி!!
கைதான சைஜூ
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Jan 2026 14:56 PM IST

சென்னை, ஜனவரி 15: சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் பணம் பறித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜம் வேறு நிழல் வேறு என்பது தெரியாமல் சமூக வலைதளங்களில் வளம் வரும் மோசடி கும்பல்களிடம் இளம் பெண்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுபோன்ற மோசடி பேர்வழிகள் சமூக வலைதளங்களில் தங்களை நல்லவர்கள் போலும், ரோமியோக்கள் போலும் காட்டிக்கொண்டு இளம் பெண்களுக்கு வலை விரித்து காத்திருக்கின்றனர். அவ்வாறு, சிக்கும் பெண்களிடம் இருந்து பணத்தை பறிப்பதே இவர்களின் நோக்கம். இதனை அறியாமல் பலர் இவர்களது மாய வலையில் சிக்கி பணத்தையும், நிம்மதியும் தொலைப்பதுடன் இதுபற்றி வெளியேவும் தெரிவிப்பது இல்லை. இதுபோல நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படிக்க: புதிய காருக்கு திருஷ்டி சுற்றிய குடும்பம்.. எலுமிச்சையால் வந்த சிக்கல்.. பரபரப்பு சம்பவம்!

சென்னையை சேர்ந்த இளம்பெண்:

சென்னை தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த சைஜு (23) என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை தனது சைஜூ மாய வலையில் சிக்க வைத்துள்ளார். அதனை அப்பெண் நம்பி பழகியதுடன், அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டு பெற்றுள்ளார்.

ரூ.1.60 லட்சம் அபேஸ்:

தொடர்ந்து, சில நாட்களிலேயே, அந்த புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி அப்பெண்ணிடம் இருந்து பணம் பறித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணும் தனது புகைப்படங்கள் வெளியே கசிந்துவிடுமோ என்ற பயத்தில் சைஜூ கேட்ட பணத்தை சிறிது சிறிதாக கொடுத்து வந்துள்ளார். இப்படியே சுமார் ரூ.1.60 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார்.

துணிச்சலுடன் இளம்பெண் புகார்:

ஆனால், அதற்கு மீறியும் சைஜூ பணம் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில் துணிச்சலடைந்த அந்த இளம்பெண் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அதோடு, நடந்த சம்பவம் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல் ராஜை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க ஆணையர் உத்தரவிட்டார்.

சிக்கிய இன்ஸ்டாகிராம் பிரபலம்:

அதன்பேரில், சைபர் குற்றப்பரிவு தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து, மார்த்தாண்டத்தில் இருந்த சைஜூவை கண்காணித்து நேரில் சென்று கைது செய்தனர். கைதான சைஜூ இன்ஸ்டாகிராமில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு ஆயிரக்கணக்கான பாலோவர்ஸை கொண்டிருந்த பிரபலம் என்பது தெரியவந்தது.

இதையும் படிக்க : தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் உயிரிழப்பு – பரபரப்பு தகவல்

பல பெண்களை மிரட்டி வந்துள்ளார்:

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சைஜுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்ததில், புகார் செய்த பெண் மட்டுமின்றி மேலும் பல பெண்களுடனும் இதேபோன்ற அவர் தொடர்பில் இருந்ததும், அவர்களையும் மிரட்டி பணம் பறித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.