காதல் தோல்வி.. 1,500 அடி பள்ளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

Young Man Killed Himself | ஊட்டியில் தான் காதலித்த பெண் தன்னை காதலிக்கவில்லை என்ற சோகத்தில் இளைஞர் ஒருவர் சுமார் 1500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காதல் தோல்வி.. 1,500 அடி பள்ளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

21 Sep 2025 11:06 AM

 IST

நீலகிரி, செப்டம்பர் 21 : ஊட்டியில் (Ooty) காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் சுமார் 1,500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் காதலித்து வந்த பெண் தன்னை காதலிக்கவில்லை என்ற சோகத்தில் காதலித்த பெண் மற்றும் தனது நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அந்த இளைஞர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த பகீர் சம்பவம் குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

காதல் தோல்வியால் ஆபத்தான முடிவை எடுத்த இளைஞர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயதான முகமது அனாஸ். இவர் குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது கல்லூரியை சேர்ந்த சக மாணவி ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி அனாஸை காதலிக்கவில்லை என அவருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 17, 2025 அன்று முகமது அனாஸ், தான் காதலித்த பெண் மற்றும் அவரது நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : ஒரே நாளில் 16 பேர்.. ஒரு மணி நேரத்தில் 11 பேர்.. கடித்து குதறிய தெரு நாய்..

1,500 அடி பள்ளத்தில் குதித்த இளைஞர்

அதில், உயிர் வாழ பிடிக்கவில்லை. என்னுடைய பெற்றோரையும், பூனைக்குட்டியையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். நான் டைகர் ஹில்சில் உள்ள மரணப்பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், அவரது நண்பர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசாருக்கு அனாஸின் பேக் மற்றும் ஒரு மதுபாட்டிலை கைப்பற்றியுள்ளனர். அதன்படி, அவர் பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டு இருக்கலாம் என நினைத்த போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : Pudukkottai: பழங்குடியின மாணவன் மீது தலைமையாசிரியர் கொலைவெறி தாக்குதல்!

மூன்று நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட இளைஞரின் உடல்

சம்பவத்தன்று இரவாகிவிட்ட நிலையில், அனாஸை தேட முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், அடுத்த மூன்று நாட்கள் இரவு, பகலாக போலீசார் தேடுதல் வேட்டை ஈடுபட்டுள்ளனர். பின்னர் மூன்று நாட்கள் கழித்து அவரது உடல் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பின்னர் உடலை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.