Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாறிய ஸ்கேன் ரிப்போர்ட்… வயிற்று வலிக்காக சென்ற பாட்டிக்கு நேர்ந்த கொடுமை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Medical Negligence Case : திருவாரூர் அருகே தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் ரிப்போர்ட் மாறிய நிலையில் மூதாட்டிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து சம்மந்தப்ப்டட மருத்துவர் மூதாட்டிக்கு நஷ்ட ஈடாக ரூ.45,000 வழங்க திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாறிய ஸ்கேன் ரிப்போர்ட்… வயிற்று வலிக்காக சென்ற பாட்டிக்கு நேர்ந்த கொடுமை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தவறான சிகிச்சையளிக்கப்பட்ட சிந்தாமணி
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Feb 2026 16:14 PM IST

திருவாரூர், பிப்ரவரி 6 : வயிற்றுவலி என தனியார் மருத்துவமனைக்குச் சென்ற பாட்டிக்கு, மற்றொருவரின் ஸ்கேன் ரிப்போர்ட்டை வைத்து தவறான சிகிச்சை அளித்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவர் ரூ.45 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என திருவாரூர் (Thiruvarur) நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொக்கலாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்தாமணி. இவரது கணவர் பக்கிரிசாமி விவசாயி. 66 வயதாகும் சிந்தாமணி கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரை கடந்த 2025 ஜூலை 1 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

மாறிய ஸ்கேன் ரிப்போர்ட்டால் மூதாட்டிக்கு ஏற்பட்ட கொடுமை

இதனையடுத்து அங்கு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அபு ஹனிபா என்பவர் அவரை வயிற்றுப் பகுதி ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தினார். இதன் பிறகு சிந்தாமணி அதே மருத்துவமனையில் செயல்படும் ஸ்கேன் சென்டரில் சிந்தாமணிக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரிப்போர்ட்டை பெற்றுக் கொண்டு மருத்துவரிடம் வழங்கினார். ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த மருத்துவர், வயிற்றில் பிரச்னை இருப்பதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார். மேலும் அவருக்கு சில மருந்துகளையும் பரிந்துரைக்கிறார்.

இதையும் படிக்க : இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள்…தங்கம் தென்னரசு தகவல்!

இதனையடுத்து மருத்துவர் அளித்த மருந்துகளை எடுத்து வந்த சிந்தாமணிக்கு தொடர்ந்து வயிற்று வலி அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து அவர் கடந்த ஜூலை 10, 2025 அன்று அதே பகுதியல் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அப்போது சிந்தாமணியின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சியாகியிருக்கிறது. காரணம் அது கோவிந்தராஜ் என்ற வேறு ஒருவருடைய ஸ்கேன் ரிப்போர்ட் என்ற உண்மை தெரியவந்திருக்கிறது.

மருத்துவருக்கு நீதிமன்றம் அபராதம்

இதனையடுத்து தனக்கு முன்பு சிகிச்சை அளித்த அபு ஹினிபா மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டபோது அவர் உரிய விளக்கமளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சிந்தாமணி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை தரப்பில் அனுப்பிய கடிதத்தில் ஸ்கேன் ரிப்போர்ட்டை மாற்றியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது.

இதையும் படிக்க : புதுச்சேரியில் இருந்து மது கடத்தலுக்கு செக்..கலால் துறையின் பக்கா ஏற்பாடு..என்ன அது!

இதனையடுத்து சிந்தாமணி கடந்த அக்டோபர் 14, 2025 அன்று திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவமனை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிந்தாமணி தவறுதலாக ஸ்கேன் ரிப்போர்ட்டை மாற்றி எடுத்துக்கொண்டார் என்றும், தவறு கண்டறியப்பட்ட சில மணி நேரங்களிலேயே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் விளக்கமளித்தார். ஆனால் அதை ஏற்காத நீதிமன்றம் சம்மந்தப்பட்ட மருத்துவர் சிந்தாமணிக்கு ரூ.35, 000 வழங்க வேண்டும் எனவும் வழக்குக்காக செலவிடப்பட்ட ரூ.10,000 சேர்த்து ரூ.45, 000 செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.